உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அன்பு முடி

தம்வழியே போகின்றார். எழுந்த யானையும் மாவெட்டி களும் சோழனார் அருகே வருகின்றனர்.

வாழ்ந்து நின்றார்:-முன்னின்ற குறைகளெல்லாம் இங்கு நிறைவாகின்றன. சிவகாமியாண்டார் பூத்தொண்டினை, அழ கொப்பனையின் அருங்குறிப்பாகக் கொண்டு,நோன்பு நோற்று வந்தனர்; அருங்குறிப்பை மறந்து, பூவே பொருள் என எண்ணியதால் அன்றோ, மலரை இழந்தபோது வாடிவதங்கி முறையிடலானார். யானை வந்து பூப்பறித்த நிலையிலும் பொலியும் ஓர் அழகொப்பனையை, அவர் காணமாட்டாதார் ஆயினார்; தடிகொண்டடிக்க ஓடினார். அதன்பயனை அப் போதே தரையடித்து வீழ்ந்து துய்த்தார். கடவுளை மறந்து கல்லிற்காகவும் செம்பிற்காகவும் கைகலப்போர் வரலாறே ஈதாகும். உயர்நிலை நின்ற முனிவரையும் பற்றெனும் பகைவன், பூமேல்பற்றென்றும், கல்மேல் பற்றென்றும், கரந்துரு வெய்தி வாட்டுவன். எல்லாம் திருவருட்செயல் என்று தெளிந்தபொழுது, அப்பகைவனின் மயக்கம் அறவே ஒழி யும். அந்நிலை அடையும் வரையில் துன்பமும் வந்துசேரும். சிவகாமியாண்டாரும் புலம்பி நின்றாரன்றோ? அருண்மொழி கேட்டதும் இன்ப அன்புருவாகின்றார். சிவகாமியாண்டார், அப்போதுதான், கதறி நிற்கும் முனைப்புநிலை நீங்கி,எல்லாம் இறைவன்செயல்' என்பதை முற்றுமுணர்ந்து, முடிவிலா இன்பத்தே மூழ்குகின் றனர் .

சோழர்:- புகழ்ச் சோழர் நின்ற முன்னையநிலையும் மிகப் பெரிய நிலையே ஆகும். இன்பத்தோடும் இறக்க அவர் முன் வருகின்றார். ஆனால் அவரும் அன்றோ 'இறத்தற்கில்லையே' என்று இடுக்கண் உறுகின்றார். இறத்தற்கும் முந்தி நிற்பது, அன்பு நிலையின் அறிகுறியானாலும், இறந்தொழிவது ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/74&oldid=1559713" இலிருந்து மீள்விக்கப்பட்டது