உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடி அவிழ்த்தல்

65

நாளும் அன்பு நிலையாவதில்லை. என்றும் இன்பமாய் வாழும் ாழ்க்கையே அன்பு நிலையாகும். 'எல்லாம் திருவருட் செயல்' என்பதை மறந்ததால் அன்றோ, அவரும் இடுக்கண் உறுகின்றார். அன்பு நிலை அறிவுநிலையுமானால் அன்றோ, உயர்நிலையாவது. ‘எல்லாம் திருவருட் செயல்' என்ற தெளி வெழுந்தபோது இடுக்கண் ஒழிகின்றது. அவர் அப்போதே இன்ப அன்புருவாகின்றார். எறிபத்தர்:- எறிபத்தர்

.

யானையைக் கொல்கிறார்; அரசர்மேல் சீற்றம் கொள்கிறார்; அவர். பெருமை கண்டு தன்னையே கொல்லப்புகுகின்றார். சிவகாமியாண்டாரிடத்தும் புகழ்ச்சோழரிடத்தும் இன்பம் விளங்கியதைச் சேக்கிழார் குறித்ததுபோல, எறிபத்தரைப் புனைந் துரைக்கையில் குறிக்க வில்லை. சிவகாமியாண்டார் பூப்பறித்து இன்பம் பெறுவதை நம்புலவர், நன்கு புனைந்துரைக்கின்றார். ஆனால் எறிபத்தர் இதற்கு முன்னர் அத்தகைய இன்ப வாழ்க்கையில் திளைத்த மையைச் சேக்கிழார் சுட்டவில்லை. திருவருண்மொழி எழுந் ததும், அவரும், இன்பக்கடலில் குளிக்கின்றார். அவரும் இன்ப அன்புருவாகின்றார். அன்பென்றால், எவர் மேலும் உள்ளம் நெகிழ்ந்துருகவேண்டும் அன்றோ? முன்னர், யார் யார்மேல் சீறி எழுந்தாரோ, அவ்வவர்மேல், பின்னிலையில் ஆறியமனதோடும் அன்பு பாராட்டுதலைச் சேக்கிழார் எடுத் துக் காட்டுகின்றார். அந்த நிலைதான், எறிபத்தாது மனமாற் றத்தை நன்கு விளக்குகின்றது. எரிமலையென வந்தவர், கொந்தளிப்படங்கி, அசையாத அம்மலைத்திருவிளக்கெனத் தூயராய் நின்று, பின் அமுதநிலவெரிக்கும் திருவிளக்காய் அன்பொளியைப் பொழிகின்றார். சோழன் வாளை நீட்டிய தும், அவன்மேல் கொண்ட சீற்றம் மாறுகிறது. சோழன்மேல்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/75&oldid=1559714" இலிருந்து மீள்விக்கப்பட்டது