உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அன்பு முடி

அன்பு பூண்டு, தம்மையே வெறுத்துத் தம் தலையை வெட் டிக்கொள்ளப் புகுகின்றார் இந்த எ

றிபத்தர்.

சீறிய ஆனைமேல் ஆறிய அன்பு:-

"ஆனசீர்த் தொண்டர் கும்பிட்டு 'அடியனேன் களிப்ப இந்த மானவெங் களிற்றை யேறி மகிழ்ந்தெழுந் தருளும்' என்ன மேன்மையப் பணிமேற்கொண்டு வணங்கிவெண் குடையின் நீழல் யானைமேல் கொண்டு சென்றார் இவுளிமேல் கொண்டு வந்தார்."

52.

"அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய் மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப் பொன்நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள் சென்னியிற் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான். 53.

,

மேலே, சிவகாமி யாண்டாருக்குத் தீங்குசெய்து, தன் மேலும்பாய்ந்து கொல்லவந்த அந்த யானையினிடத்தும் அன் பும் கொள்கின்றார் எறிபத்தர். இவ்வுயரிய அன்பு நிலையைக் காட்டவே, ஐந்தாங் காட்சியைக் காட்டுகின்றார், நம் புலவர். எல்லாம் திருவருட் செயல்' என்ற திருவருண்மொழியைக் கேட்டபின், அத்திருவருள் வழி நின்ற அவ்வியானைமேலும் அன்பு வெள்ளம் பெருகுகின்றது. 'திருவருள்வழிநின்ற அவ் வரசன், திருவருள் வழிநின்ற அவ்வானைமேல் ஏறிச்செல்லு தலே தகுதி' என ஒரு தோற்றமுண்டாகின்றது. அவ்வாறே செய்தல் வேண்டும் எனப் புகழ்ச்சோழனாரை வேண்டுகின்றார் எறிபத்தர்; அக்காட்சியைக் காண வேணவா கொள்கின்றார்; அரசனேறும் பெருமையையும், அரசனேறியபோது அவ் வானை பெறும் தோற்றப் பொலிவையும்,கண்டு களிக்கவே விரும்புகின்றார். வேழத்தின் மேலெழுந்த அன்பன்றோ ஈது? ணமை இன்ப அன்பு, இவ்வாறு எதனையும் தன்னுட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/76&oldid=1559715" இலிருந்து மீள்விக்கப்பட்டது