உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடி அவிழ்த்தல்

67

கொண்டு இன்பமாய் ஒளிரும், எனக் காட்டிய சேக்கிழாரே இன்ப அன்பின் இயல்பினை அறிவார். புகழ்ச்சோழனாரும், எறிபத்தர் வேண்டியபடியே செய்தமையைச் சொன்னயம் பெருகப் பாடுகின்றார் சேக்கிழார். 'யானைமேல்கொண்டு சென்றார்; இவுளிமேல் கொண்டு வந்தார். ஏழ்கடலும் ஒன் றாய் ஒலிப்பதுபோலப் படைகள் திரண்டு எழுந்து களிப்பி னால் ஆர்க்கின்றன. மண்ணவர் மகிழ்ந்து வாழ்த்துகின்றனர்.

திருப்பணி நோக்கிச் சென்றார்:-புகழ்ச்சோழனார்,யானை மேலேறிச் செல்வதனை அழகிய கோலம் என எண்ணாது அடியவரிட்ட திருப்பணி என்றே எண்ணிப்போகின்றார் எனச் சேக்கிழார் எடுத்துக் காட்டும் நுட்பம் போற்றத்தக்க தாகும். இக்காட்சியைக் காண்கின்றார் எறிபத்தர்; இன்ப அன்புருவாகின்றார்.

"தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமி யாரும் சார எம்பிரான் அன்ப ரான எறிபத்தர் தாமும் ;என்னே ! அம்பலம் நிறைந்த தொண்டர் அறிவதற்(கு) அறியார்' என்று செம்பியன் பெருமை யுன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார்."

54.

'என்னே, அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற் கரியார்' என்று செம்பியன் பெருமையுன்னித் திருப்பணி நோக்கிச் செல்கின்றார். சோழனே இவருடைய மனத்தை ற்றினவன், ஆதலின் அந்த வழிகாட்டியாம் அன்பனை நினைத்தே செல்கின்றார்.

காற்றடங்குதல்:-இவ்வாறு அமைதியைக் காட்டி முடிக்கின்றார் சேக்கிழார். யானையோ கடுங்காற்றில் சுழலும் கருமலை என வந்தது; காற்றொழிந்து அரசனைத் தாங்கி ஆட்டுக்குட்டியென அடங்கிச் செல்கின்றது. கடுங்காற்றோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/77&oldid=1559716" இலிருந்து மீள்விக்கப்பட்டது