உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அன்பு முடி

எறிபத்தரது புனைந்துரை, இவ்வாணையின் புகழ்ந்துரையாகும். யானையின் மாறுதல்களோடு எறிபத்தரது மனநிலையும் மாறிக்கொண்டே போகின்றதன்றோ?

பலவேறு அன்புநிலை : - இவ்வைந்து காட்சியும் பலவகை யான அன்பின் காட்சிகளேயாம். முதற்காட்சியில், பூத்தொ ண்டு புரியும் சிவகாமியாண்டாரது அன்பினைக்காண்கின்றோம். பூவிழந்து புலம்புகின்றமையும் காண்கின்றோம். அது புலம்பு தல் மிகுந்த மலருலக வாழ்க்கை. இரண்டாங் காட்சியில், அடியார்மேல் அன்பு பூண்ட எறிபத்தர், சீறி எழுந்த யானையை எ றிகின்றமையைக் காண்கின்றோம். அது சீற்ற மிக்க எரியுலக வாழ்க்கை. மூன்றாங் காட்சியில், யானைமேல் அன்புகொண்ட அரசனது படை, திரண்டு வருகின்றமை யைக் காண்கின்றோம். இது சீற்றம் மிகுந்த படையுலக வாழ்க்கை. நான்காம் காட்சியில் எறிபத்தரும், புகழ்ச்சோழ ரும், ஒருவர்க்கொருவர் பரிந்து, உயிரிழக்க முந்துவதைக் காண்கின்றோம். அது சீற்றம் தணிந்திரங்கி நிற்கும் அரு ளுலக வாழ்க்கை. ஐந்தாங் காட்சியில் எல்லாரும் உயிர் பெற்றுப் பொலிந்து இன்பவடிவாய் விளங்கி அன்பாய் வாழும் உயர் நிலையைக் காண்கின்றோம்.ஈது திருவருள் உலக அன்பு வாழ்க்கை. இவற்றிலே ஒன்றிற்கு ஒன்று என்ன வேற்றுமை? ஐந்தாம் நிலையில் நாம் காணும் அன்பின் உயர் நிலையை என் என்பது? தெளிவே வடிவான நிலை; இன் பமே வடிவான நிலை; எப்பொருள் மேலும் வெறுப்பிலா நிலை; எவற்றையும் விரும்பிப் பேணும் நிலை; இறப்பதன்றி என்றும் வாழும் நிலை; ஈதே அவ்வுயர் நிலை. நான்காம் காட்சி யில், எறிபத்தர் துன்பமேமீக்கூர நிற்றலையும்; புகழ்ச்சோழர் தம்மை யிழக்க முந்தும்போது இன்பமடைதலையும், காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/80&oldid=1559719" இலிருந்து மீள்விக்கப்பட்டது