உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறப்பியல்புகள்

71

கிறோம். இன்ப அன்பு புகழ்ச் சோழனாரளவில் சிறிது மிகு கின்றமை காண்கிறோம். ஆனால், உடனே அவரும் துன்பத் தின் வாய்ப்படுகின்றார். இன்ப அன்பை முற்றும் பெற்றில ராதலின், திருவருள் மொழியே, வந்து வழிகாட்டுகின்றது. இவ்விருவர் அன்பும் படிப்படியாக மாறிமாறி உயர்நிலையடை வதனை முன்னரே குறித்து வைத்தோம். முன்னைய மூன்று காட்சியிலே வரும் அன்பு நிலைகளிலும் என்ன மாறுபாடு! என்னமாறுபாடு!! பூவினை இழந்து புலம்புநிலை யடைகின்றார் சிவகாமியாண்டார். களிற்றினை இழந்து சீற்றநிலை யடைகின்றார் புகழ்ச்சோழர்.

சீற்றத்திலும் சிறப்பு நிலைகள்:- சீற்ற நிலையிலும் வேறு பாடு காட்டுகின்றார் அன்றோ சேக்கிழார் பெருமான்? எறி பத்தர் சினந்து யானையை வெட்டிய சீற்ற நிலையும், அன்பி னால் எழுகின்றதொன்றே. யானை இறந்தது கேட்டுப் படை யெடுத்து வந்த புகழ்ச்சோழனாரது சீற்ற நிலையும், அன்பினால் எழுகின்றதொன்றே. புகழ்ச்சோழனாரது சீற்றமோ பெரும் பொருள்பற்றி எழுகின்றது; எனினும், அஃது இமைப் போதில் அடங்கிநிற்கிறது; அளவறிந்து, இடமறிந்து, போத றிந்து, ஆளறிந்து விளங்குகின்றது. சோழனார் சொல்லிய படி அச்சீற்றம் ஆடும். சீற்றமே வடிவாய் எழுகின்ற சோழர், சீற்றத்திற்கு அடிமை யல்லர். சீற்றமே அவருக்கடிமை. அறிவின் கண்ணை மூடுகின்றதில்லை அச்சீற்றம். அச்சீற்றம் கொண்டபோதும் அடியவர் திறத்தை மறவாது போற்று கின்றார் சோழனார் . இதனைச் சீற்றநிலை என்று சொல்லலாமே யன்றிச் சினநிலை, வெகுட்சிநிலை என்று சொல்லுதற்கில்லை. ராம திருஷ்ணர் கூறியுள்ள புனைந்துரை யொன்று புகழ்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/81&oldid=1559720" இலிருந்து மீள்விக்கப்பட்டது