உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

அன்பு மூடி

சோழரது நிலையை விளக்குகின்றது. "பாம்பொன்று பலரை யும் கடித்து வந்தது. அதன் அருகே எவரும் வாராது ஓடினர். அறவண அடிகள் ஒருவர் அதனைக் கண்டு, அவ் வாறு செய்வது தவறென அப்பாம்பிற்கு உறுதிமொழி கூறிச்சென்றனர். அன்று தொட்டு, அப்பாம்பு எவரையும் கடியாது வாழ்ந்து வந்தது. கடியாதிருத்தலைக் கண்ட சிறு வர், அதன்மேல் கல்லெறியத் தொடங்கினர். கல்லெறி யுண்டு வாடி வதங்கிய அப்பாம்பை, அவ்வறவணவடிகள் மறுமுறை கண்டபோது, அப்பாம்பு, அவரது உறுதிமொழி கேட்டே, அவ்வாறு துன்புறுவதாக முறையிட்டது அப் பெரியார் அதன்மேல் அன்புடையராகி, யான் கடிக்க வேண்டா என்றேனே அன்றிச் சீறவேண்டா என்று கூறிய தில்லையே' என்றெடுத்துக் காட்டினார். பின்னர் அப்பாம்பு சீறத் தொடங்கியது. சிறுவரும் பெரியரும் ஒடி ஒளிந்தனர். அப்பாம்பு சீறித் தன்னுயிரையும் காப்பாற்றிக்கொண்டு, கடி யாது பிறருயிரையும் காப்பாற்றியதாம்." இப்புனைந்துரையிற் கூறியபடி புகழ்ச்சோழனார். சீறுகின்றாரேயன்றிச் சினந்தெரி கின்றார் இல்லை. அதனாலன்றோ, இச்சீற்றம், இனம் என்னும் ஏமப்புணையைச் சுடாது விடுகின்றது. எறிபத்தரது சீற்றம், யானையையும் மாவெட்டிகளையும் வீழ்த்தி, அரசன் வரையும் சென்று பற்றி யெரிகின்றதன்றோ? இவ்வேற்றுமை ஒன்றை மட்டுமா காட்டுகின்றார் சேக்கிழார்? சோழனாரது அருகி ருந்த மாவெட்டிகள், யானைக்கொலையைத் தீங்கெனப் பழித் துச் சினந்து கூறுதலையும், சோழனார், அதனை, வென்றி உயர்த்திச் சீறுதலையும், முன்னரே கண்டோமன்றோ? ஒவ் வொன்றையும்,இவ்வாறு, தனிச் சிறப்பு நிலைபெறப் புனைந் துரைக்கும் பெருமை பெற்றாரே திருவருட்புலவர் ஆவர்.

என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/82&oldid=1559721" இலிருந்து மீள்விக்கப்பட்டது