உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறப்பியல்புகள்

73

பல வேறு வழிபாடு:-சிவகாமியாண்டார், எறிபத்தர், சோழனார் என்ற மூவரது மனநிலைக் கேற்ப, அவர்களது வழி பாடும் வேறுபடுவதைச் சேக்கிழார் சுட்டுகின்றார். சிவகாமி யாண்டார் இறைவனை எப்படி வழிபட்டார் என்பதனை முன்னரே கண்டோம். எறிபத்தர், மறநிலையில் நின்றருளிய முன்னிலையில், இறைவனை எண்ணும்போதெல்லாம், இறை வனது மறநிலையே அவரது நினைவிற்கு வருகிறது. பாம் பணிந்த கோலமும் (பன்னகாபரணர் - பாட்டு 40) யானை யைக் கொன்ற கோலமுமே (மன்றவரடியார்க் கென்றும் வழிப்பகைகளிறே யன்றே) அவர் நினைவிற்கு வருகின்றன. இன்பக் கூத்தாடும் மன்றினை நினைக்கும் போதும், களிறுத் துப் போர்த்த கடுஞ் சினக்கூத்தே நினைவிற்கு வருதல் காண்க. புகழ்ச் சோழனார் இன்ப மலர்மாலை சூடியிருப்ப தற்கேற்ப, இறைவனது இன்பவடிவையே எண்ணிப் போற் றுகின்றார்; "மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள் ளிக் குன்றவர் அடியவர்" என்று எறிபத்தரை யானையருகே கண்டபோது, இன்பமன்றகத்தும் இன்பக் குன்றகத்தும் இன்பவடிவாம்அம்மையோடிருக்கும் இறைவனோடு சேர்த்தே காண்கிறார்; எறிபத்தரே யானையைக் கொன்றார் என அறிந்த போதும், இசைவடிவாம் குழையணிந்த இறைவனோடும் இணைத்தே எறிபத்தரைக் கண்டு, 'இன்பத்திற்கெதிர் நிலை யாக நின்று தவறிழையார்', எனத் துணிவு கொள்கிறார்.

தஎ

முன்னிலையும் பின்னிலையும்:- எறிபத்தர் சினந்ததைக் கண்டு, "நகைமுகங்கொண்டு இன்பக் கூத்தாடும் இறைவனது அடியார் எரிமுகங்கொள்வதோ" என்றே புகழ்ச்சோழனார் வருந்துகிறார். "அம்பலவாணர் அன்பர் இத்தனை முனியக் கெட்டேன்" என்று வயிறுபிடிக்கிறார்; முடிவில் யானைமேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/83&oldid=1559722" இலிருந்து மீள்விக்கப்பட்டது