உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அன்பு முடி

ஏறித் திருக்கோயில் புகும்போதும்,கூத்தரசின் இன்பவடி வாய் நீள எடுத்த திருவடியை எண்ணிக் கொண்டே இன்ப வடிவாகின்றார்.

"பொன்னெடும் பொதுவிலாட னீடியபுனிதர் பொற்றாள்

சென்னியிற் கொண்டு சென்னி திருவருள் கோயில் புக்கான்." எனவே, சோழனார் இன்பவடிவாம் கூத்தரசையே எண்ணி வாழ்கின்றார். எறிபத்தர் மனமாறிய றிய போது, அவரும் அக்கூத்தரசினை எண்ணிப் போகின்றார் எனச் சுட்டிக் காட்டும் சேக்கிழாரது பாவின் நுட்பத்தை என் என்பது? '"அம்பல நிறைந்தார் தொண்டர் அறிவதற் கரியார் என்று செம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென் றார்.” ‘நோக்கி' என்பதனால் கூத்தரசின் இன்பக் கூத்திற் கேற்றதோர் திருப்பணியையே இவர் நாடுவாராயினமை விளங்கவில்லையா? யானையுரியையும் பாம்பையும் மறந்து, இன்பக் கூத்தையே எண்ணுகின்றார் எறிபத்தர்; மறநிலையை மறந்து அறநிலையாம் இன்ப நிலையிலேயே நிற்கின்றார். சிவ காமியாண்டாரோ மறநிலையையும் அறநிலையையும் ஒருங்கு புகழ்ந்தமை கண்டோம். "களியானையின் ஈருரியாய்,' புரம் வெந்தவியச் சீறும் சிலையாய்," "மறலிக் கிறைநீள் செஞ் சேவடியாய்" என்று மறநிலையையும் போற்றுகின்றார்; "அடி யார் அறிவே". "தெளிவார் அமுதே" என்று அறநிலையாம் இ இன்ப நிலையையும் போற்றுகின்றார். இவ்வாறு இவர்கள் பல வேறு நிலையில் நின்றும், ஓர் இறைவனையே பலவாறு வழிபடுதல் காண்க.

அன்பு நிலைகள்:-அவ்வழிபாட்டிற் கேற்ப, அவர்கள் அன்பு நிலையும் வேறுபடுகின்றது. சிவகாமியாண்டார் அன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/84&oldid=1559723" இலிருந்து மீள்விக்கப்பட்டது