உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறப்பியல்புகள்

75

போ ஒரு வடிவினது; புகழ்ச்சோழர் அன்போ மற்றொரு வடி வினது; எறிபத்தர் அன்போ வேறொரு வடிவினது. அம்மட் டுமா? எறிபத்தர் அன்பும், முன்னிலை யன்பு, பின்னிலை எறிபத் யன்பு என வேறுபட்டு அன்றோ விளங்குகின்றது. எ தரது அன்பின் வளர்ச்சியே இப்புனைந்துரை என இதுவரை யும் கூறி வந்துள்ளோம். ஈது உண்மையோ என்றன்றோ முன்னுரையில் இவ்வாராய்ச்சியைத் தொடங்கினோம்.

.

என

ஐயமும் தெளிவும்:-"இனைய வன்பெருந் தொண்டே மேலும் செய்து செல்கிறார் எறிபத்தர்' எனச் சேக்கிழார் கூறுகின்றாரன்றோ. 'ஆளுடைத் தொண்டர்செய்த ஆண்மை' என்று மேலும், அஞ்சாது அவர் யானையைத் தாக்கியதை யன்றோ,சேக்கிழார், புகழ்கின்றார். அவ்வாறானால், எறிபத்தர் மனமாற்றமடைந்து உயர்நிலை பெறுவதை அவர், எங்குச் ட்டுகின்றார்? இவ்வாறெல்லாம் எண்ணங்கள் எழுவதும் இயல்பே. எனினும், இதுவரையும் கூறிவந்த புனைந்துரையே, ஊன்றிப் அம்மனமாற்றத்தைச் சுட்டவில்லையோ பார்த்தல் வேண்டும். திருவள்ளுவனார், தீங்குசெய்தாரை ஒறுத்தல், பொறுத்தல், தீங்கை மறத்தல், தீயோர்க்கு அவர் நாண நன்னயஞ் செய்தல், என நான்கு நெறிகளை ஒழுக்க ஏணியிலே படிப்படியாக உயர்ந்திருக்கும் பழுக்க ளாகக் கூறிச் செல்கின்றார். ஒறுத்தல் நெறி, பொறுத்தல் நெறி, மறத்தல் நெறி, நன்னய நெறி என்ற இந்நெறிகளில் எறிபத்தர், இப்புனைந்துரையில் படிப்படியாக உயர்கின்றார் அன்றோ. முதல்நிலையில் வேழத்தை ஒறுத்தும், வேந்தனை வெறுத்தும் நின்ற எறிபத்தர், பின்னிலையில் வேந்தனை வணங்கி வேழத்தின் மேல் அன்புபூண்டு அதனை அரசனோடு உலவிவர விழைகின்றார். ஆதலின், திருவள்ளுவர் கொள்

,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/85&oldid=1559724" இலிருந்து மீள்விக்கப்பட்டது