உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அன்பு முடி

கைப்படி எறிபத்தர் ஒறுத்தல் நெறியினின்றும் நன்னய நெறியாம் இன்ப அன்பு நெறியிற் புகுகின்றார் அன்றோ? சேக்கிழார்க்கும் இஃதே கருத்தாயின் 'வன்றொண்டு' என் றும், “ஆண்மை” என்றும், புகழ்வது எறிபத்தரது பின் னிலையையேயாகும். 'ஆளுடைத்தொண்டர்-செய்த ஆண்மை’ என்றபாட்டில், புகழ்ச்சோழரும், எறிபத்தரும், ஒருவரின் ஒருவர் திமிறிக்கொண்டு இறக்க முற்படும் காட்சியையே சேக்கிழார் உயர்த்திப் பாடுகின்றார். தம்முயிரைத் தம் கையால் மாய்த்துக்கொள்ளப் புகுந்து கழுத்தை அரியும் எறிபத்தர் ஆண்மை யன்றோ ஆண்மை! புகழ்ச் சோழர் கையினின்றும் வாளைத் தாம் வாங்காதிருந்தால், அச்சோழர் தம்மைத்தாமே வெட்டிக்கொள்வர் என அஞ்சி, அவருயி ரைக் காக்கத் தம்முயிரைத்தர முந்திய அன்பு நிலையன்றோ உயரிய அன்புநிலை. யானையை வெட்டியதினும் இவ்வாண்மை சிறந்ததன்றோ? தம்மையும் இழக்க முந்திய இத்தொண் டன்றோ எதனினும் பெருவலியதாவது? ஆதலின், ஆண்மை என்றும் வன்றொண்டென்றும் இதனையே சேக்கிழார் புகழ்கிறார் என்க. “ ஆண்மை” என்பதால் வேழ வென் றியையே குறிக்கின்றாரானால், அவ்வடியார் தம்மைத் தாமே கொல்ல முன்வந்த தனிப் பெருந்தகைமையை அப்பாட்டில் சேக்கிழார் குறிக்கவில்லை எனல்வேண்டும். இப்பெரியாரது பாடலுக்குக் குன்றக் கூறல் என்ற குற்றம் சாட்டவேண்டும். நாவலர் பெருமானும் புகழ்ந்து கூறும் இவ்வுயிர் நிலையைச் சேக்கிழார் பெருமான் சுட்டாது விடுவாரா?

நம்பியாண்டர் நம்பியின் எறிபத்தர்:-சேக்கிழார், எறி பத்தரது வரலாற்றைக் கூறிச் செல்லும் போக்கினை,ஊன்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/86&oldid=1559725" இலிருந்து மீள்விக்கப்பட்டது