உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறப்பியல்புகள்

77

பார்ப்போமானால், யானையைக் கொன்றமையை முடிவு நிலை யாக, அப்புலவர் பெருமான் கொள்ளவில்லை, என்பது புலனா கிறது. மலர் பறித்த யானையையும், மாவெட்டிகளையும், வெட்டினார் என எறிபத்தர் வரலாற்றை

“ஊர்மதின் மூன்றட்ட வுத்தமற் கென்றோ ருயர் தவத்தோன் தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த ஊர்மலை மேற்கொள்ளும் பாக ருடல் துணி யாக்குமவன் ஏர்மதி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே.

என்ற பாட்டால் கூறி, புகழ்ச் சோழர், தாமும் தம்மைக் கொல்ல வாளை நீட்டிய வரலாற்றை,

"புலமன்னிய மன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த

குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன் நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள் வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே.

என்ற பாட்டால் பின்னே பாடுகின்றார், நம்பியாண்டார் நம்பி. சேக்கிழாரோ, இவ்விரண்டு வரலாற்றையும் ஒன்று சேர்த்து இப்புனைந்துரையாகப் பாடுகின்றார்.

எறிபத்தரது புது வரலாறு:-யானையை

யெறிதலே

முடிந்த முடிபாகிய சிவப்பெருந் தொண்டானால், எவ்வெவ வரும் உளங்கொள் அதனை வேறு வகையிற் கூறியிருக்க லாம் அன்றோ! கொலை யென்று அஞ்சி நடுங்காதவாறு பாடு தலைச் சேக்கிழார் அறியாரோ?கீழ் வருமாறும் பாடலாம் அன்றோ? "சிவகாமியாண்டர் முதுமையிலே தள்ளாடி நடக் கின்றார்; யானை விரைந்து வருகின்றது. பூங்குடலையைப் பறிக்கின்ற வன்மையால் அவரையும் இழுக்கின்றது. யானைக் காலில் விதிபட நிற்கும் அந்நிலையில், எதிரே வருகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/87&oldid=1559726" இலிருந்து மீள்விக்கப்பட்டது