உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அன்பு முடி

எறிபத்தர், ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, யானையின் தும்பிக் கையை வெட்ட வரும்போது, தம்மை எதிர்த்த மாவெட்டி களையும் குத்துக் கோலாளரையும் தும்பிக்கையோடு ஒரே வீச்சில் வெட்டிக் குவித்துச் சிவகாமியாண்டாரைக் காப் பாற்றுகின்றார்.இவ்வாறு, நம்பியாண்டார் நம்பிகளது பாடலுக்கு உரை கூறுதல் கூடும்.

என்னைப்

தடுத்தல் நெறியும் ஒறுத்தல் நெறியும்:- பிறர் உயிரைக் காப்பது தற்காப்பினும் சிறந்ததன்றோ? தற்காத்து நிற்கை யிலே பிறர்க்குத் துன்பம் நேரிடின் அதனைப் பழிப்பவர் இல்லை. தம் பொருளைக் காக்கும் பொருட்காப்பும் தற்காப் பேயாம். காத்துத் தடுக்கக் கூடிய நிலையில்தான் பிறர்க்குத் துன்பமூட்டுதல் அறமாகும். என் பேழையைக் கள்வனொரு வன் உடைக்கும்போது, என் வலியால் அவனைத் தடுத்தல் அறமேயாகும். அவன் துன்புறுகின்றானே என பழிப்பவர் இல்லை. இதனைத்தான் தனைத்தான் ஆறுமுக நாவலர் எடுத் துக் காட்டும் சங்கற்ப நிராகரணம் விளக்குகின்றது. திரு டன் திருடிக்கொண்டு போய் விற்றபின், அவனை நான் வருத் துதல் அறமாகாது. அந்நிலையில் எதனை நான் தடுக்கின் றேன்? எதனை நான் காக்கின்றேன்? பாடிகாவலாளரிடம் சென்று முறையிட்டு மன்றாடுதலே வழக்காகும். காக்கும் காலம் போயது. ஒறுத்திடும் காலம் வந்தது. தடுப்பது என். தொழில். ஒறுப்பது அரசன் தொழில். தம்மைப்பிறர் எதிர்த்த

போதுத

தற்காப்பும் பொருட்காப்பும் வேண்டிக் குடிகள், எதிர்த் தவர்களைக் கொல்லுதல் கொலையாகாது.ஏன்? அவர் எண் ணியது தற்காப்பே யன்றிப் பிறர் கொலையன்று. குடிகளுக் கேற்றது தடுத்தல் நெறி; அரசனுக்கேற்றது ஒறுத்தல் நெறி. குடிகளே, ஒறுத்தல் நெறியைக் கைப்பற்றின் நாடெலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/88&oldid=1559727" இலிருந்து மீள்விக்கப்பட்டது