உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறப்பியல்புகள்

79

போர் முழங்கும். ஆதலின், அரசனது ஒறுத்த னெறியைப் புகழ்வோர், குடிகளது ஒறுத்தனெ றியைப் பழிப்பர். இஃது உண்மையானால் எறிபத்தர் ஒறுத்தனெறியைப் பின்பற்றியது எங்ஙனம் உயர்நிலையாகும்? தடுத்தல் நெறியில் எறிபத்தரைப் புகுவித்துப் பாடச் சேக்கிழார் அறியாரோ? யாமறிந்த இவ் வரலாற்றுப் போக்கை, அருண்மொழிப்புலவர் அறியார் என எண்ணுதல் அறியாமையே யன்றோ? செங்கோன் முறை யனைத்தையும் உணர்ந்த சேக்கிழார், நம்பியாண்டார் நம்பியைப்பின்பற்றி,

எறிபத்தரானவர் தடுத்தல் நெறி நின் று, யானையைக் கொன்று சிவத்தொண்டு ஆற்றுகின்றார் எனக் கூறாது, ஒறுத்தல் நெறி நின்றே தொண்டாற்றுகின் றார் எனக் கூறுவதுதான் என்னை? அரசனே கொடுமை புரிந்தபோது, குடிகள், ஒறுத்தல் நெறி நிற்கலாம் என்ற அறத்திற்கு இங்கு இடம் இல்லை. எறிபத்தர், முன்னிலை யில் அவ்வாறெண்ணி யிருந்தாலும், பின்னர்ப் புகழ்ச் சோழனாரை நேரிற் கண்டபோது, கொடுங்கோன் மன்னன் என அவரைக் கூறியிருப்பரோ? அவ்வகையாலும், முன் னிலையில் தாம் செய்த தீங்கினைப் பின்னிலையில் உணர்கின் றார் எனல் வேண்டும்.

நேற்றே முடிய வேண்டாவோ? அன்றியும், தடுத்தல் நெறி நிற்கின்றார் எறிபத்தர் என்றால், அஃதோடு புனைந் துரை முடிவடைகின்ற தன்றோ? அஃதே முடிந்த முடிபா கும். பின்னர்ப் புனைந்துரையை விரித்துரைத்தல் மற்றொன்று விரித்தலாகும். அதுபற்றி யன்றோ பின்னைய வரலாற்றை வேறொரு புனைந்துரையாக வேறொரு பாடலில் கூறுகின்றார் நம்பியாண்டார் நம்பிகள். ஆனால், ஒறுத்தல் நெறி நிற்கின் றார் எறியத்தர் என்று கூறினால், அதனினும் உயர்ந்ததொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/89&oldid=1559728" இலிருந்து மீள்விக்கப்பட்டது