உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அன்பு முடி

து

நிலையைச் சுட்டுதல் கூடுமன்றோ? அப்போதுதான் இருவர லாற்றையும் ஒன்றாக இயைவித்துப் பாடுதல் கூடும். பற்றியே சேக்கிழார், தமது புனைந்துரையில், பூச்சிந்தியயானை யானது அத்தெருவைக் கடந்த பின்னரே, அதனைப் பின் தொடர்ந்து சென்று எறிபத்தர் கொல்வதாகப் பாடுகின்றார். சேக்கிழார் கூறுகின்றபடியும் நம்பியாண்டார் நம்பியின் பாடலுக்கு உரைகாண முடியும் அன்றோ?

குறிப்பு

இவ்

அரசனைச் சினந்தது அறமேயோ:- நாம் காட்டியபடி, வேறு வகையில் இவ்வரலாற்றைப் புனைந்துரையாமை, எதிர்மறைச் சான்றேயாகும். றயாகும். உடன்பாட்டுக் களையும் இப்புனைந்துரையில் காண்கின்றோம். வேழ வென்றியிலும், சில குறைபாடுகள் தோன்றவே, சேக்கிழார் பாடுகின்றார். யானை மேலும், மாவெட்டி கள் பாலும், வேந்தன்மீதும், சினம் கொள்கின்றார் எறிபத் தர்.யானையினையும் மாவெட்டிகளையும் சினந்து கொன்றது அறமே எனக் கொள்வோரும், வேந்தனுக்குத் தீங்கு நினைத்த தை அறமென்று கூறமுன்வாரார். திருவள்ளுவர் கூறியபடி, இச்சினமென்னும் சேர்ந்தார்க்கொல்லி; அடியவரினமெனும் புகழ்ச்சோழனாகிய ஏமப்புணையையும் சுடுகின்றதன்றோ? எறிபத்தரே பின்னிதற்கு வருந்துகின்றார். அதற்குக் கழுவா யாக அன்றோ, தம் கழுத்தை அரிந்துகொள்ள முற்படுகின் றார். பின்னும், 'அம்பல நின்றவர் தொண்டர் அறிவதற்கரி யார்' என்று செம்பியன் பெருமையையே யுன்னி, அதற் கேற்றபடி திருந்தியமைந்த தமது திருப்பணியை உள்ளத்தே வைத்து நோக்கிச் செல்கின்றார். என்றன்றோ சேக்கிழார் கூறுகின்றார். வேந்தனைச் சீறுகின்றமை ஒரு தீங்கேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/90&oldid=1559729" இலிருந்து மீள்விக்கப்பட்டது