உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறப்பியல்புகள்

81

மாவெட்டிகள் செய்த தீங்கு என்ன?:- மாவெட்டிகளைக் கொல்வதையும் ஒரு குறையாகவே சேக்கிழார் விளக்கி வைக்கின்றார். மாவெட்டிகளைக் கொல்வது எதனாலே? "மாதங்கந் தீங்கு செய்ய வரு பரிக்காரர்தாமும் மீதங்குக் கடாவுவாரும் விலக்கிடா தொழிந்து பட்டார்' என்று ஏறி பத்தரே கூறுகின்றார். எறிபத்தர் அங்கு நிகழ்ந்ததை நேரிற் கண்டவரல்லர். சிவகாமியாண்டாரும், மாவெட்டிகளைப் பற் றிக் குறை கூறவில்லை. எறிபத்தர், தாமாகவே இவ்வாறு உய்த்துணர்கின்றார். எனினும், சினத்தோடெழுந்த உய்த் துணர்வாதலின், அது பிறழ்ச்சியுடையதெனச் சேக்கிழார் சுட்டுகின்றார். அங்ஙனமாயின், யாது நிகழ்கின்ற தெனச் சேக்கிழார் பாடுகின்றார்? யானையானது, மாவெட்டிக்கன் வழி நில்லாது, அவர்களைத் தன்வழியே கொண்டு, ஒரு தெருவிலே போய் முட்டுகின்றது; சிவகாமியாண்டாரது பூங்குடலையைப் பறிக்கின்றது. காண்கின்றனர் மாவெட்டி கள்; சிவகாமியாண்டாருக்கும் பிறர்க்கும், தீங்கொன்றும் வேறு நேராதவாறு, அதனை, அப்புறம் கொண்டு செல்கின் றனர். அவ்வாறு கொண்டு செல்கின்ற அருமையை,

மேல்கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறு சண்டக் கால்கொண்டு போவார் போலக் கடிதுகொண் டகலப்போக" எனப் பாடுகின்றார் சேக்கிழார். மேலே, எறிபத்தர்மீது யானை பாயும் போதும், மாவெட்டிகள், அதனை அப்புறம் செலுத்திக்கொண்டு போக முயல்கின்றனர். அவர்களால் இயலவில்லை. என் செய்வர் அம்மாவெட்டிகள்? அடக்கி யாள முடியாத ஆனையை, அடக்கியாள வந்தமையே, அவர் கள்மேல் குற்றம். திருவருளின் வழிநின்ற யானையைத்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/91&oldid=1559730" இலிருந்து மீள்விக்கப்பட்டது