உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை






viii


ஈதோர் அன்பு நுட்பத்தைக் காட்டுகின்றதென விளக்கி னேன். மொழி பெயர்ப்பாசிரியரோ மாவெட்டிகளே அவ் வாறு வேண்டுவதாகக் கூறிப் பின்னே எறிபத்தரும் அவ் வாறு வேண்டினார் என்பர். இவை கிடக்க.


இவ்விரு நூல்களும் பெரிய புராணத்திற்குப் பின் எழுந்தன எனக்காட்ட ஒரு குறிப்புண்டு. இவ்வரலாற்றில் வரும் சோழனது பெயர் புகழ்ச்சோழனாகும். சேக்கிழார் காலத்தே, இந்த நூலைப் பாடுவித்தவன், அநபாயன் ஆகும். அநபாயனது முன்னோன் எனப் புகழ்ச் சோழரைப் பாடுகின் றனர் சேக்கிழார். இதனுண்மையை ஆராயக்கூடாத பிற்கால இருட்டில் வாழ்ந்த மொழி பெயர்ப்பாசிரியர்கள் இருவரும், புகழ்ச்சோழனையே அநபாயன் என்றும், அநபாயநயன் என் றும், தாம் விரும்பியவாறு எழுதிவிட்டனர்."அநபாயன் சீர் மரபின் மாநகரமாகும்' என்பதற்கு உண்மைப்பொருள் காணாதபடி, வரலாறுகள் மறைந்துபோன காலமே, இந்நூல் கள் இரண்டும், தோன்றிய காலமாகும். இதனை ஆராய் ருக்குப் பயன்படுமாறு, அவற்றை மொழி பெயர்த்துப் பின்னே சேர்த்துள்ளேன்.


சேக்கிழாருடைய பாடல்களையும் ஆங்காங்கே சேர்த் துள்ளேன். அவற்றின் பொருளறிய விரும்புவார்க்கென உரை எழுத விரும்பினேன். பழைய உரையையே வெளி யிடின், யான் கூறுவது தான் பொருள் என்ற மயக்கம் நீங்குவதோடு, ஓதுவார் பழைய உரையோடு என்னுடைய கொள்கையையும் ஒப்புநோக்க இடமும் உண்டாகும்; பழைய உரைக்கு உயிர்கொடுத்த பெருமையும் எனக்குக் கிடைக்கும் எனக்கருதி, அச்சேறிய உரைகளில் மிகப்பழைய தாம் மழவை. மகாலிங்கையர் உரைமேல்என்எண்ணம் சென் றது. என்னுடைய உரைநூல் காணாது மறையவே, வருந்தி நின்ற நிலையில், திரு.இராஜேசுவரி யம்மையார் M A., L.T.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/9&oldid=1559648" இலிருந்து மீள்விக்கப்பட்டது