உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




vii

மொழிபெயர்ப்பு நூலா தலினாலன்றோ, இதனிலுள்ள பாடல் கள் ஆற்றொழுக்காக ஓடாது, தடைபடுகின்றன."நெடியோன் அறியா நெறியார் அறியும் - படியால் அடிமைப்பணி செய்த தொழுகும் - அடியார்களில் யான் ஆரா அணைவார் முடியா முதல்வர்" என்பதனையும்,"கண்டவர் இதுமுன்பண்ணல் உரித்த அக்களிறே போலும்" என்பதனையும் மொழிபெயர் த் துள்ளமை காண்க. சேக்கிழாருடைய சிவகாமியார் "பிழைத் துப்போகா நின்றதித் தெருவே" என்றார்; பிழைத்தல் என்ற சொல்லையே பயன்படுத்தி, "இங்கது பிழைப்பதெங்கே என்கிறார் எறிபத்தர்.இதனை மொழிபெயர்ப்பார், சிவகாமி யார் கூறிய பிழைத்தலை மொழிபெயர்க்காது எறிபத்தர் கூறிய பிழைப்பை மட்டும், மொழிபெயர்க்கும் போது, சுவை யொன்றுமின்றி, வெற்றெனத் தொடுத்தலாக முடி வது காண்க. பல பாடல்களுக்குப் பெரிய புராணத்தின் உதவிகொண்டு பொருள் அறிந்தோம். "பொன்மலைப் புலிவென்றோங்க" என்ற பெரிய புராணப் பாட்டில், காவே ரிக்கு வழிதிருத்தியமைத்ததையே சேக்கிழார் கூறியுள் ளார் என, யான் பொருள் எழுதியுள்ளேன். இவ்வாறே உபமன்னிய விலாசமும் பொருள் கொண்டிருத்தல் காண்க. திருவானிலை என்பதனை திருவானிலை என்றும், ஒலையில் ஒதக் கூடுமாதலின், அவ்வாறே பிறழ்பட எழுதி ஹரதாமம் என மொழிபெயர்க்கின்றது இந்நூல்.எறிபத்தர் வீரபக்தராகின் றார்; கருவூர் கர்ப்பபுரி யாகின்றது. மொழி பெயர்ப்பார் சேக்கிழார் உள்ளக் கருத்தினை உள்ளவாறு விளக்கவில்லை. அரசர் வாளை நீட்டியபோது, 'தன்னைத்தான் துறக்கும் என்று வாங்கினார் என்பர் சேக்கிழார். தம்மைத் தாமே கொல்லவேண்டி வாங்கினார் எறிபத்தர் என்பர், மொழி பெயர்ப்பாசிரியர். யானை மீதேறிச் செல்லவேண்டும் என அரசரை வேண்டுவார் சேக்கிழார் நூலில்,எறிபத்தரேயாம்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/8&oldid=1559647" இலிருந்து மீள்விக்கப்பட்டது