உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




vi

என்பதனைக் கோஸ்தலம் என மொழிபெயர்த்துக்கொண் டார். எறிபத்தர், யானையை எறிந்த தறுகண்மையிலும், தன்னுயிரைப் பொருட்படுத்தாது முன் வந்தமையையே பாராட்டுகின்றார். தன்னிழவே சிறந்ததெனத் தம் வரலாற் றைத் தொடங்குதலும் காண்க. வானிடை எழுந்த திருமொ ழியும் "மழுவை எறிந்துவிட்டு உள்ளத்தாலே வழிபாடியற் றுக" எனக் கட்டளை யிட்டமையை, முனிவர் வற்புறுத்துவ தின் நின்றும், அவருடைய நாட்டம் அன்பு நாட்டமே என் பது விளங்குகிறது. எறிபத்தர் வரலாற்றை வேறொரு வழி யில் கூறக்கூடும் என யான் கனாக் கண்டதை இக்கட்டுரை யில் (பக்கம் 77) காணலாம். அதற்கு ஒத்துள்ளது முனிவரார் கூறும் வரலாறு, யானை, மதவெறிபிடித்து ஊரைக் கலக்குகிறது; எதிரே சிவகாமர் வருகின்றார்; அஞ்சி நடுங்குகின்றார்; யானை, பூங்குடலையை வீசி எறிகிறது; புலம்பு கின்றார் சிவகாமர்; புலம்புதல் கேட்டு ஓடிவந்து யானையை வெட்டுகின்றார் எறிவார். இந்த நிலையில் யானையைக் கொல் வது தவறாகாமை நோக்குக.

உபமன்னிய பக்தவிலாசமோ, கைலைக் கெழுந்தருளும் போது, சுந்தரர் பேரொளியாகத் தோன்ற, அதனை விளக்கிச் சுந்தரர் வரலாற்றையும், அவர் பாடிய திருத்தொண்டத் தொகையிற் கண்ட அடியார்கள் வரலாற்றையும், முனிவர். ளுக்கு, உபமன்னியர் கூறியது. சிவபக்த விலாசத்திற்கு முன்னூல் போலத் தோன்றினாலும், நடைமுதலியவற்றை நோக்கும்போது, பின்னூல் என்பது வெளியாகிறது. இந் நூல், சேக்கிழார் நூலின் மொழிபெயர்ப்பென்பதிலும் ஐயம் இல்லை. வடமொழிப் பற்றுப் பெரிதும் உடைய எனது நண்பர் வியாகரண சிரோமணி-திரு. கங்காதர நாயர் (Sans- krit Pandit, Chintadripet High School) அவர்களும் இந் நூல்களை என்னுடன் ஆராய்ந்து, இம்முடிவிற்கே வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/7&oldid=1559646" இலிருந்து மீள்விக்கப்பட்டது