உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




V

தோன்றுகிறது. எனது நண்பர் திரு-துரையரங்கம் பிள்ளை {Teacher, Hindu Theological High School) யவர்கள் இக் குழவியின் மூன்றாம் பிறப்பின்போது, செவிலித்தாயாய் நின்று, பிழையறத்திருத்திப் பாராட்டி வளர்த்து உலகில் தவழவிடுகிறார். ஒரே நாளில், இக்கட்டுரை உலகிடைச் சிறிதே ருருட்டியருள அச்சேற்றி இக்குழவிக்குக் கற்பித்தார் எனது நண்பர் திரு. சி. பாலசுந்தரமுதலியார் அவர்கள். இக் குழவியினிடத்து இந்த நால்வருக்கும் இருக்கும் அன்பு எனக்கு இருந்ததில்லை. எந்நன்றியும் அவர்க்கே உரியதாம். இப்போதைய பிறப்பைப்பற்றி ஒன்று கூறி முடித்துக் கொள்கின்றேன்.என்னுடைய பிறப்புக்கள் திருமாலின் பிறப் பைப் போலவோ, புத்தரின் பிறப்புக்களைப் போலவோ சுவை யுள்ளன அல்ல; ஆதலின் பரக்கப்பேச விருப்பமில்லை. சேக் கிழார் வடமொழியிலிருந்தே இந்த நூலை மொழிபெயர்த் தார் எனச் சிலர் மூலை முடுக்கில் முழங்குகின்றார்களாம். இவ்வாறு வாடைக்காற்று வீசுகின்ற தென்பர் எனது நண் பர் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்கள். உபமன் னிய பக்த விலாசமும், சிவபக்தவிலாசமும், என் கையைச் சிறிது கடித்தாலும், அவற்றை வெள்ளித் தொடரிட்டுக் கொண்டுவந்து ஒதினேன். சிவபக்தவிலாசம், உபமன்னியர் கூறிய வாலாறுகளைக் கேட்ட அகத்தியர், முனிவார்களுக் குக் காஞ்சியில் கூறியருளியது. இதனை இயற்றியவர் ஹர தத்த முனிவர். இவர் சேக்கிழார்க்கும் பின் வாழ்ந்தவரே யாம். நல்ல இதிஹாச நடையில் செவிக்கினிக்கப் பாடியிருக் கின்றார் இப்பெரியார். மதம்பிடித்த யானையைக் கரேணு எனப்பெண்பாலால் கூறுவதுதான் என்னைத்திடுக்கிடச் செய் தது. மற்றைப்படி இந்நூலின் ஓசையின்பம் என்னுள்ளத் தைக் கவர்ந்தது. எறிபத்தர் என்ற பெயரைத் தாருகர் (எ-றி வார்) மொழிபெயர்த்துக் கொண்டார் ஆசிரியர்; ஆனிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/6&oldid=1559645" இலிருந்து மீள்விக்கப்பட்டது