உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




iv

விளைத்தது. மற்றொரு பிறப்பில் வேறொரு கல்லெடுப்பு வீட் டில், கண்ணப்பர் வரலாற்றைக்கேட்டு, என்னையு மறியாது கண்ணீரும் கம்பலையுமாகக் கலங்கி நின்றேன். இந்த அன் பெனும் குழவியை விரிவுரையாளர் அப்பொழுதே கழுத் தைப் பிடித்து நெருக்கிவிட்டார்! நானும் அயர்ந்து தூங்கி விட்டேன். திருநீற்றுப்பையும், சிவப்பட்டும், திருமலரும், சேக்கிழாரை, நான் பாராதபடி முழுதும் மறைத்து விட் டன. இலக்கியச்சுவை ஒன்றே நாடும் எனக்குத் தூக்கமே விஞ்சியது.

எனது நண்பர் திரு. ஆ. ச. அண்ணாமலை முதலியார் B.A. (Assessor, Corporation of Madras), என் மற்றொரு பிறப்பில், சேக்கிழாரைப்பற்றிக் கடவுட் பாவாணர் எனப் புகழ்ந்து பேசினார்; புன்னகை புரிவதே எனது வழக்கம். சேக்கிழா ரது பெரிய புராணத்தைத் தம்மோடு உடனிருந்து ஓதவேண் டும் என்று வற்புறுத்தினார் அப்பெரியார். பல பிறவியிலும் இத்தகைய ஆகூழ் என்னை விட்டுப் பிரிந்ததில்லை. கரும்பு தின்னக் கூலியும் கிடைக்கும். திருநூல்களை யான் ஓத, நண்பர் பலர் வற்புறுத்துவது என் வாழ்க்கையில் வழக்க மாய் விட்டது. அவருடன் ஒதினேன்; புதியதொரு பிறப் புப் பிறந்தேன். புதியதோர் உலகிற் புகுந்தேன். சேக்கிழார் வெறி என் தலைக்கும் ஏறிவிட்டது. அப்போது, என் அறிவிற் பிறந்த குழவிகளைச் செவிலித்தாயாய் அன்புடன் பாராட்டி வந்தனர் எனது நண்பர். இத்தகைய குழவிகளில் ஒன்றின் இரண்டாவது பிறவியே இந்தக் கட்டுரை; இப்போது மூன் றாம் பிறவி எடுத்து உலகிடை நிலவத் தளர்நடையிட்டு உம்மை நோக்கி வருகிறது.

பழம் பிறப்பைப்பற்றி எழுதும்போது, காய்தலோ உவத்தலோ இருப்பதற்கில்லை. நடுநிலை நின்றே இக்கட்டுரை யை ஆராய்கின்றேன். இந்நாளுக்கும் ஈது ஏற்றதென்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/5&oldid=1559644" இலிருந்து மீள்விக்கப்பட்டது