உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறப்பியல்புகள்

'லாறு அன்று' என இதனை, முன்னுரையிற் புகழ்ந்தோம். அன்பின் வளர்ச்சியைச் சேக்கிழார் பெருமான் போல, உயி ரோவியமாக, எழுதிக்காட்டுவோர் சிலரே! அங்ஙனமிருந்தும், இவ்வரலாற்றில், எறிபத்தரது வேழவென்றியே சிறந்ததென் பார், தம்முடைய கொலைத்திறத்தைப் புகழ்கின்றாரே யன்றிச் சேக்கிழாரைப் புகழ்கின்றார் அல்லர். அடிமையாகி நின்றோர், வாளேந்திப் போர் புரிய வலியற்றபோது, வாயிலேனும் போரைப் பற்றிப் பேச எண்ணி, 'பிறரைக் கொல்வதே பேர றம்' என வாய்ப்பேச்சுப் பேசிய பிற்காலக் கொள்கையை, உரிமை கூத்தாடிய பெரியபுராணத்திற் புகவிடுவது, பெரும் பழியாகும். இயற்கை வழியே சென்று, துன்பத்தை எல்லாம் மறந்து, சேக்கிழார் புனைந்துரைக்கும் அன்பாற்றில் யாமும் மூழ்கித் திளைக்குமாறு, இன்பவடிவாம் இறைவன், அருள் புரிவானாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/93&oldid=1559732" இலிருந்து மீள்விக்கப்பட்டது