பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9 கொண்டிராமலை ஏன்? ஒரு :சிறிதும் எண்ணிப் பாராம லுங்கூடத் தங்களையறியாமல் பல காரியங்களை பலர் செய்து வருவதை நாம் காண்கிறோம்! உதாரணத்திற்காக நான் சிலவற்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சிலருக்குத் தூக்கம் வருவதற்கு முன்னர் கொட்டாவி வரும். அப்படிக் கொட்டாவி விடும்போது விரல்களால் மூன்று சிட்டிகை போடுவதைப் பார்க்கிறோம், அப்படிப்பட்ட நண்பரைப் பார்த்து அவர் கொட்டாவி வரும்போதெல்லாம் மூன்று சிட்டிகை போடுகிறாரே அதற்கு என்ன காரணம் என்று கேளுங்கள். கொட்டாவி வீடும் நண்பர் சிறிது கோபக்காரராக இருந்தால் முறைத்துப் பார்ப்பார். அல்லது சாந்தமான வராக இருந்தால் மெதுவாகச் சிரித்துக்கொண்டே அது ஏதோ பழக்கம். காரணம் ஒன்றுமில்லை.என்று பதில் கூறுவார். இதைப்போலவே சூளையில் உள்ள ஒரு பெரியவர் புரசைவாக்கத்தில் நடந்த ஒரு சச்சரவில் பஞ்சாயத்து செய்யப் புறப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். சூளையிலுள்ள பெரியவர் புரசைவாக்கம் போவதற்காகத் தன்னுடைய வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் போகிறார். அவர் புறப்பட்டுத் தெருவில் சிறிது தூரம் செல்லும் போது அடுத்த வீட்டின் கூறையில் இருந்த பூனை எதிர்த்த வீட்டுத் திண்ணைப் பக்கமாக ஒரு எலியைப் பிடிக்கக் குறுக்கே ஒடுகிறது. இதைக் கண்டவுடனே, பஞ்சாயத் துக்காக வேகமாக நடந்து சென்ற பெரியவர் திடுக்கிட்டு திரும்பி வந்து தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார்.