13
கிறார்கள் தேவையற்ற சாமான்களைச் சேகரித்து வைத்து வீணாக்குகிறார்கள்.
இப்படிப்பட்ட சடங்குகளைத்தான் நாங்கள் சடங்குகள் கூடாது என்று கூறி, அவைகளை அடியோடு நீக்கி விட்டுப் பல ஆண்டுகளாக எத்தனையோ சீர்திருத்தத் திருமணங்களை நடத்தித்தான் வருகின்றோம் அதனால் என்ன கெட்டுவிட்டது? ஏதும் இல்லையே!
எனவே மக்கள் சடங்குகளைத் தள்ளிவிடுவதைக் கண்டு சந்தேகப்படுவதும், பழைய பழக்கவழக்கங்களை விட்டு விட்டோமே என்பதற்காக பதைபதைப்பதும் அர்த்த மற்றதாகும்!
திருமணத்தின்போது தாலிகட்டும் பழக்கம் மக்களிடையே இருந்துவருகிறது. தாலிக்கயிற்றில் புலியின் நகத்தைப் போலும், பல்லினைப் போலும் பொன்னால் சேர்த்துக் கட்டுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?
நம்முடைய பெரியவர்களும் இதற்கு ஒருவிதமான விளக்கங் கூறுகிறார்கள். அதாவது பழங்காலத்திலே காடுகள் அதிகம் நாடுகள் குறைவு, காட்டிலே புலிகளும் அதிகம் ஆதலால் ஒரு மங்கையை மணக்க விரும்பிடும் வாலிபன், காட்டிற்குச் சென்று புலியை வேட்டையாடிக் கொன்று அதனுடைய பல்லையும், நகத்தையும் கொண்டு வந்து, தான் காதலிக்கும் பெண்ணிடம் காட்டுவானாம்! இதோ பார்! நான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகம். இதுதான் அதனுடைய பல், என்று அந்த மங்கை நல்லாளிடம் தன் வீரத்தை அறிவிப்பான். இதைக்கண்ட மங்கையும் இப்படிப்பட்ட வீரனைத்தான் நான் மணப்பேன், என்று கூறி அந்த வீரனையே