பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12 அந்த நண்பர்களைக் கேட்டால் சாந்தமான நேரமாக இருந்தால் 'என்னமோ பழக்கம் சார் விடமாட்டேன் கிறது' என்று பதில் சொல்வார்! இன்னும் சிலர் நாம் இப்படிக் கேட்டால் உங்களுக்கு வேறு என்னதான் வேலை! சுயமரியாதைக் காரர்களுக்கு இப்படி எதை கிளறிக்கொண்டு கேலி செய்து கொண்ருக் கத்தான் தெரியும் என்று சலித்துக்கொள்வார்கள். யாவது பூச்சி பிடிக்கச் செல்லும் பல்லியின் சத்தத்தைக் கேட்டதும் தாங்கள் பேசி அலசிக்கொண்ருந்த அகில உலகப் பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்திவிட்டுத் தரையில் மூன்றுதரம் தட்டுவதற்குப் பொருத்தமான காரணம் எதையுமே கூறமுடியாது. கொட்டாவி விடும்போது மூன்று தரம சிட்டிகை போடுவதும், போகும்போது எதிரே பூனை குறுக்கே வந்தால் சகுணம் சரியில்லையென்று திரும்பிவிடுவதும்' பல்லி சொல்லுக்குத் தரையைத் தட்டுவதும், அதற்கு பலன் பார்த்துப் பதைபதும் மக்களிடம் எப்படியோ ஏற்பட்டுவிட்ட பழக்கத்தினாலும், அறியாமையினா லுந்தான். இவைகளையெல்லாம காரணந் தெரியாமல், ஏன் செய்கிறோம். எதற்காகச் செய்கிறோம் என்பதைப்பற்றிய எண்ணம் ஒரு சிறிதுமின்றி, தங்களை யறியாமலே பழக் கத்தினால் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட காரண காரியமற்ற செயல்கள் பழக்கத்தின் பேராலும், வழக் கத்தின் மூலமாகவும் பல நடைபெறுவதை நாம் காண முடியும். இவைகளைப் போலவேதான் திருமணக் காலங் களிலேயும் சில அர்த்தமற்ற காரியங்களைச் செய்து வரு