பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

________________

23 இதைப் போலவே குடும்பத்திற்கு சிறிதும் பொருத்த மற்ற மனைவியையும் ஒழுங்கீனமான பெண் ணையும் விலக்க ஆண்களும் உரிமை கோரலாம். ஒத்த கருத்தின்மை ஏற்படும் போது விலகி வாழ உரிமை இருவருக்கும் நல்லது தானே. இதனால் பெறுவது சமூகத்திற்கும் நன்மை உண்டு. விவாகரத்து உரிமைக்கான சட்டம் வருவதைப் போலவே, நாம் நெடுநாட்களாகத் தேவையென்று பாடு பட்டு வரும் மற்றொரு பிரச்சனைக்ககாவும் சட்டமியற்றப் படுகிறது டில்லியில். நாம் பல ஆண்டுகளாகக் கூறிவருகிறோம். பெண் களுக்கும் ஆண்களைப் போலவே தகப்பன் சொததுக் களில் உரிமை இருக்கவேண்டும் என்று. நாம் இப்படிக் கூறிய போதும் பெரும்பாலோர் எதிர்த்தனர். ஏளனம் செய்து தூற்றவும் தூற்றி னர். பெண்ணுக்குச் சொத்துரிமையா? பெண்ணிடம் பணம் இருந்தால் ஆணை அவள் எப்படி மகப்பாள் என்று கூக்குரவிட்டனர் நாம் எதற்கும் அஞ்சாது இதனை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்து வந்தோம். அதன் பலன் இன்று பெண்களுக்குச் சொத்துரிமை தரும் மசோதா விரைவில் டெல்லிப் பாராளுமன்றத்தில் சட்டமாகக்கப்படுமென்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நாம் எந்தக் காரணங்களுக்காகப் போராடி வந் தோமோ அவைகள் எல்லாம் இன்று சட்டமாகி வரு கின்றன எனபதைக் காணும் போது நாம் செய்துவரும் பணி எவ்வளவு மகத்தானது என்பது மட்டுமல்ல, நாட்