பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

________________

21 அந்தக்காலம் என்பது முடிவற்றது, அளவிட்டுக் கூற முடியாதது, அளக்க அளக்க நீண்டு கொண்டே போகிற கஜகோல் அது ஆகவே அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்கால ஏற்பாடுகள் என்று கூறுவதும், பழக்கங்கள் என்று சுட்டிக் காட்டுவதும் நிச்சயமற்றவைகளாகும். பொருத்தமான தாகவும் இலலாதவைகளாகும். வைதீக நண்பர்களையே கேட்கிறேன். அவர்கள் புராணப்படி பார்த்தாலும் அந்தக்காலம் என்பதைக் கூற முடியுமா? ஹரிச்சந்திரன் ஆண்ட காலமா? இராமன் ஆண்டான் என்று கூறப்படும் காலமா? அவருக்கு முன்னர் அறுபதினாயிரம் மனைவியரை மணந்து வாழ்ந்ததாகப் பேசப்படும் தசரதன் காலமா? அதற்கு முன்னால் இருந்த தாகக் கூறப்படும் இட்சுவாகு பரம்பரையின் சாலமா? அது எந்தக்காலம்? கூறுங்கள்? உலகம் தோன்றியது எனக் கூறப்படும் காலமா? அல்லது உலகம் தோன்றாத அநாதிகாலமா? மகாவிஷ்ணு ஆலிலைமீது திருப்பாற் கடலில் பள்ளிக்கொண் டிருந்தார் என்று கூறும் புராண காலமா? அப்படிப் பள்ளி கொண் டிருந்த மகாவிஷ்ணுவின் உந்திக்கமலத்திலிருந்து மூளைத்த தாமரைமீது பிர்மா வீற்றிருந்த காலமா? பிரமாவின் நாவில் இருந்து சரஸ்வதி வேதங்களை ஓதிய காலமா? எது அந்தக்காலம்? புராணங்களின்ப பார்த்தாலும் அந்தக் காலம் இதுதான் என்றோ, அதுதான் என்பதாகவோ உறுதியாகக் கூறமுடியுமா? முடியாதே! முடியவில்லையே! எந்தக் காலத்தையாவது குறிப்பிட்டு அதுகான் அந்தக்காலம் என்று, நாங்கள் கூறும் காலம் என்று