பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

________________

நான் 26 இவர்களில் யார் குறிப்பிடும் அந்தக் காலத்தை வைதீகர்கள் அந்தக் காலம் என்று கூறுகிறார்கள் குறிப்பிடுகிற அந்தக் காலத்தையா? எனது அல்லது எனது பாட்டனார் சொன்னாரே அந்தக் காலமா? அதைவிட அவரது தகப்பனார் கூறினாரே அந்தக் காலமா? எந்தக் காலத்தை இவர்கள் அந்தக் காலம் என்று கூறுகிறார்கள்? அந்தக் காலம் எது என் பதற்கு ஒரு நிர்ணயம் ஏற்படுத்திவிட்டுப் பிறகு கூறட்டும் அந்தக்கால பழக்கங்கள் என்று. அதற்குப் பிறகு நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி பேசுவோம். அந்தக்காலம் எந்தக்காலம் என்பதைக் குறிப்பிட்டுக் கூறிவிடாமல் வெறும் அடிமூச்சுக் குரலால் அந்தக்காலம் அழிவதா? அந்தக்கால ஏற்பாடுகள் தொலைவதா? என்று உரத்திப் பேசுவதால் என்ன பயன்? இன்று வெள்ளைக்காரன் கூடத்தான் பேசுகிறான். 'நாங்கள் அந்தக் காலத்தில் இந்தியாவை ஆண்டபோது என்ன செய்தோம் தெரியுமா? என்று. இதைப்போலவே முஸ்லீம்களுந்தான சொல்கிறார்கள் 'அந்தக் காலத்தில் டெல்லியில் ஔரங்கசீப் ஆண்டபோது முஸ்லீம்களுக்கு இருந்த செல்வாக்கே செல்வாக்கு' என்று முஸ்லீம்கள் பேசுகிறார்கள். அந்தக் காலத்தில் ஆண்ட விக்கிரமாதித்ய ராஜாவின் காலமே காலம்' என்று இந்துக்களும் பெருமை யோடு பேசுகின்றனர். பௌத்தர்கள் அந்தக்காலஇல் ஆண்ட அசோகனை நினைக்கிறார்கள். இப்படிப் பலரும் அந்தக் காலத்தைப்பற்றி பலவிதமாகப் பேசுகிறார்களே! பெருமைப்படுகிறார்களே! இதில் எதை அந்தக்காலம் என்று திட்டவட்டமாக ஏற்பது? பின்பற்றுவது. அந்தக்காலம் எது என்பதற்கு யாராலும் திட்டமான முடிவு கூறமுடியாது. நிர்ணயத்தையும் காட்டமுடியாது.