பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47 டாயே!" என்று கொஞ்சும் குரலில் முடிந்தது அவளுடைய வீழ்ச்சி! வள்ளிக்கு, நாலு எழுத்து எழுதப் படிக்கத் தெரியும். அவளிடம் சென்று, ஆயிரம் கண்ணே! கற்கண்டே போட்டு, கிழவி எழுதச் சொன்னாள். காளியாயி காடாட்சத்தாலே நான் இன்னும் உசிரை வச்சிக்கிட்டுத்தான் இருக்கிறேன். நான் ஒருத்தி இருக் கிறேன் என்கிற நினைப்பே உனக்கு மறந்து போச்சா. உன் னைக் கண்ணாலே கண்டுச் செத்துத் தொலைக்கத்தான் நான் காத்/ கிட்டு இருக்கிறேன். நாலு நாளைக்கு ஒரு தடவை கூடச் சோறுகிடையாது. நாள்இப்பவோ பின்னையோன்னு இருக்கிற இந்தச் சமயத்திலேகூட நீ ஊர் திரும்பாமல் இருக்கிறது தர்மமா! ஒரே ஒருதடவை வந்து போ. உன்னைக் காணவேணும் என்ற ஆசை என்னைக் கொல்லுகிறது. நான் கண்ணை மூடறதுக்குள்ளே ஒருமுறை பார்த்தாகணும் இங்கே நான் அனுபவிக்கிற தரித்திரம் சொல்லி முடியாது ஒரு அஞ்சோ பத்தோ அனுப்பினா,நாலைந்து கோழி வாங்கி வளர்த்து' முட்டை வித்து பிழைச்சிக்காலம் - நான் சாப் பிட்டதுபோக மிச்சம் கூடக்கி ைக்கும் - பனிக்காலத்தில் உடல் வெட வெடன்னு ஆடிப் பிராணனே போயிடறமாதிரி ஆயிடுது ஒரு கம்பளிப் போர்வை அனுப்பினா நல்லது. கிழவி சொல்லிக்கொண்டே வந்தாள் - வள்ளி எழுதிக் கொண்டே இருந்தாள். 'இன்னும் என்ன எழுதணும் - பெரிய பாரதமே எழுதியாச்சி"- என்று சலித்துக்கொண்டாள் வள்ளி. "கண்ணு! இன்னும் ஒரே ஒரு சங்கதி எழுதிடு என்று கெஞ்சினாள் கிழவி.