பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49 "பாட்டியம்மா பாதை ஓரமாகப் போ... எதிரே காளைமாடு வருது...என்று அன்புடன் கூறினான். கிராமத் துக்குப் புதிதாக வந்து குடியேறிய பாதிரியப்பன். கிராமத்தில் வைத்தியசாலை நடத்திக்கொண்டு. பச் சிலைகளைச் சேகரித்து ஏதோ ஆராய்ச்சி நடத்திக்கொண்டி ருந்தான் பாதிரியப்பன். கிராமத்தில் நல்ல மதிப்பு. கிழவி யைப் 'பாட்டியம்மா' என்று அழைக்கும் ஒரே ஆசாமி. பாதிரியப்பன் தான். "டாக்டரய்யாவா' என்று கேட்டுக்கொண்டே, அவன் கையைப் பிடித்துக்கொண்டாள் கிழவி, அவளுக்கு ஒரு எண்ணம் உதித்தது. கடிதத்தை மகன் சரியாகப் படிக் கிறானோ இல்லையோ என்ற சந்தேகம் போய்விட்டது. எழுதிக்கொடுக்கிறார்களோ இல்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது எனவே கடிதத்தை எடுத்து டாக்டரி டம் கொடுத்து,அக்கரையிலே இருக்கிற என் மகனுக்கு அனுப்ப இந்தக் கடுதாசி - படித்துச் சொல்லுங்கோ டாக் டர் அந்தச சிறுக்கி கிறுக்கினா; சரியா இருக்குதான்னு பார்க்கலாம் என்று சொன்னாள்.டாக்டர் கடிதத்தைப் பிரித்தார் - சிரிப்பு வந்து விட்டது? என்ன டாக்டரு! சிரிக்கறிங்க. யார் பாட்டி யம்மா கடுதாசி எழுதி கொடுத்தது' .அதுதான் - வள்ளி - ஒருமாதிரியானவள்னு ஊர்லே பேசுவாங்களே, அந்தக்குட்டி அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியும் 'போக்கிரிப் பொண்ணு' பாட்டியம்மா அந்த வள்ளி கடுதாசியிலே எழுத்தே கிடையாது கோலம் போட்டு வைத் திருக்கிறா...! ---4