உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


'என்னாது... கோலம் போட்டிருக்கிறாளா...பாவி நான் சொல்லிக்கொண்டே இருந்தேன் அவ எழுதிக்கிட்டே இருந்தா....'

'உன்னை அந்தப் பொண்ணு ஏமாற்றிவிட்டிருக்கா இருக்கட்டும் பாடடியம்மா, நான் பார்த்து கண்டிக்கிறேன்'.

இப்பத்தானே எனக்கு சூட்மம் புரிந்தது. என் மகன் பேரிலே கோபித்துக் கொண்டேன்.நானு இந்தச் சூட்மம் தெரியாததாலே, இந்தப் படுபாவிங்க ஒவ்வொருத்தரும் நான் கடுதாசி எழுதிக் கொடுக்கச் சொன்னபோதெல்லாம் இந்த வள்ளி செய்ததுபோலச் செய்துதான் என்னை ஏமாத்தியிருக்காங்க. என் ஆசை மகனுக்கு ஒரு கடுதாசியும் போய்ச் சேர்ந்திருக்காது. அந்தக் கோபம் என் மகனுக்கு அதனாலேதான் காலணா காடுதாசி கூட அவன் போடலே டாக்டரய்யா இப்படி ஒரு கிழவியை ஏமாத்திடலாமா. நீங்களே சொல்லுங்க இது தர்மமா

வருத்தப்படாதீங்க பாட்டியம்மா--சாய்ந்தரமா வீட்டுக்கு வாங்க, நான் கடிதம் எழுதித் தருகிறேன்.

டாக்டரை வாழ்த்திக்கொண்ட கிழவி தன் குடிசைப் பக்கம் சென்றாள்.

வள்ளி வீட்டுக்குப் பாதிரியப்பன் சென்று, சற்றுக் கோபமாகவே கண்டித்தான்.

'அது ஒரு பைத்தியம் டாக்டரய்யா! நான் மட்டுமில்லை. நம்ம கிராமத்திலே யாருமே, கிழவி கடுதாசி எழுதச் சொன்னா, ஏதாவது கிறுக்கித்தருவாங்க அதுக்கு மூளை சரியில்லை; அதனாலே, இப்படி ஓயாம, கடுதாசி எழுதிக் கொடு கொடுன்னு, உசிரை வாங்கும் அதனாலேதான் நான்