பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

. 55 கேள் டாக்டரய்யா - முளையாவது குழம்பறதாவது... மணி பொறந்து ஐந்து வருஷத்துக்குப் பிறகு, இவன், பொறந்தான். இவன் என் வயித்திலே கருதரிக்கிறதுக்கு முந்தி' என்னை திருக்குளத்துப் பேய் பிடிச்சிடுச்சி, பேயை ஓட்ட அவரு படாதபாடு பட்டாரு -- செலவு கண்மண் தெரியாமச் செய்தாரு - அந்தப் பாழாய்ப்போன பேய்ஒழிய மாட்டேன்னு சொல்லிடுச்சு. சூடு வைச்சிப் பார்த்தாங்க, தலைமுழுக்கு. வேப்பஞ்சேலைகட்டி மாரியம்மன் கோயிலிலே சுற்றிவர்ரது,ஒண்ணு பாக்கி இல்லை, திருக்குளத்துப் பேய் எதுக்கும் மசியிலே, எனக்குப் பேய் பிடிச்சிருந்தபோது தான் கருதரிச்சிது. இத்தப்பய பொறாதான் - அவனைத் தான் நீங்க பார்த்தீங்களே - இலட்சணமாயிருப்பான்- அவன் பொறந்ததும், ஊர்க்கோடியிலே இருந்த ஒரு பிரம் மாண்டமான புளியமரம் வேரோடச் சாய்ந்து கீழே விழுந் தது...இடி இடிச்சி, மாரியம்மன் கோவில் கோபுரத்திலே விழுந்து அதை இடிச்சுத் தள்ளிவிட்டுது. எங்க வீட்டிலே இரண்டு படிகறக்கும் அருமையான பசு மாடு அது 'காவ் காவ்'னு கததிகிட்டே கீழேதொபீல்னு விழுந்து செத்துப் போச்சு அப்பப்பா, அவன் பொறந்ததும் ஊருக்கே பெரிய ஆபத்துன்னு வையுங்களேன், அப்படியெல்லாம் நேரிட் டது. இதோடு போச்சா: அவரு, அவங்க அப்பாரு, நல்லா இருந்தா மனுஷனுக்குக் காச்சல் கண்டு, வாயிலே 'நொப்பும் கொரையும் தள்ளி, கைகால் இழுப்பு வந்திடுச்சி, எனக்கும் பயம் சந்தேகம். துக்கம். பூசாரியைக் கூப்பிட்டு, என் னய்யா இதுன்னு கேட்டேன். எல்லாம் திருகுளத்துப் பேய் செய்கிற வேலை ன்னு சொல்லிவிட்டு, அவன் சொன்னான். "உன் குடும்பமும் இந்தக் கிராமமும் நாச மாகவே இருக்கவேணும்னா, முத்தம்மா? இந்தச் சிசுவை நீ வளர்க்கக் கூடாது. இது பேய்க்குப் பொறந்தது. அத