பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

________________

புலிநகம் 1659மராட்டிய மண்டலத்திலே மாவீரன் சிவாஜி வீர வெற்றிகளின் பயனாக, விடுதலை வேட்கை கொண்டவர் களின் மனதிலே கொலு வீற்றிருந்த சமயம், மணிமுடி தரித்துக் கொள்ளவில்லை' ஆனால் அவன் காலடியிலே கிடந்தது மணிமுடி! ஓய்வுதான் இல்லை. பட்டாபிஷேகத் துக்கான காரியங்களைக் கவனிக்க மராட்டிய மன்னன் என்ற பட்டம் இல்லையே தவிர, நிலை அதுதான். யார் இந்த அதிரச் செய்கிறான். மண்டலங்களை வீரராக்குகிறான்! மாயாவி? மலைகளை மண்டியிட வைக்கிறான். உழவர்களை எங்கும் அவன் வெற்றி! பரத கண்டத்திலேயே புதியதோர் ஒளியானால்! பரவி வரும் இஸ்லாமிய ராஜ்யத்துக்குப் புய லானான்/இவனை இப்படியே விட்டுவைப்பதா வீரன், தீரன் இரட்சகன் அவதார புருஷன் என்றெல்லாம் புகழ்ப்படு கிறான். புதிய அரசை சிருஷ்டிக்கிறான். சாத்பூரா மலைச் சரிவுகளிலெல்லாம் அவனுடைய போர் வீரர்கள்! குகை களிலே கூடித் திட்டம் வகுத்து விடுகிறான். பிறகு அரண் மனைகளிலே அழுகுரல் கேட்கிறதே சரித்திரத்திலே அவன் தேடும் இந்தச் சாமான்யக் குடியானவனை இப்போது வளர விடுவது ஆபத்து எதிர் காலத்திலே அவன் புகழ் நிலைத்து விடும்! சிவாஜியின் வெற்றி நிறுத்தப்பட வேண்டும் - என்று இந்திய உபகண்டத்திலே ஆங்காங்கு ஆச்சரியமும் அச்ச மும் கலந்த பேச்சு. எங்கும் அந்த அஞ்சா நெஞ்சனைப் பற்றி. அவனை அலட்சியப்படுத்த முடியாது. அவன் வளர்ச்சியைச் சாமானயமாகவும் கருதக்கூடாது. மண்ணிலே செம்பொன் கண்டெடுக்கிறான். மயங்கிய மராட்டியத்திலே மாணிக்கங்களை உண்டாக்கி விட்டான். மாசு மருவற்றவன் என்றும் புகழப்படுகிறான் குடியில்லை.கூத்தியில்லை.