பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

________________

57 பட முடியாமல் தவிக்கிறார்கள் - இந்த கிழவிக்கு 'பகுத் தறிவு வாதம் செய்து காட்டி பேய் பூதம் பிசாசு என்ப தெல்லாம் கட்டுக்கதை, பூசாரி ஒகு புரட்டன், அவன் சொன்னது அத்தனையும் அர்த்த மற்றது என்று ஒப்புக் கொள்ளும்படி எப்படிச் செய்ய முடியும். ஆக்ஸ் போர்டும் கேம்ப்ரிஜூம் படித்து விட்டு மனைவிமார்களை அரசமரம் சுற்றிவரச் செல்வதற்கு அமெரிக்கன் மாடல் மோட்டாரில் அனுப்பி வைக்கிறார்கள். இந்த கிழவிக்குப் 'பகுத்தறிவு புகட்டவா முடியும்! 'பாட்டி/எவனோ ஒரு மூடன் சொன்னதை நம்பி நாச மாகித் தொலைக்காதே" என்று கூறினார். 'மூடனா? யாரைச் சொலகிறாயப்பா பூசாரியையாக சேச்சே! அவனுக்கு, ராமாயணம், பாரதம். கந்தபுராணம் எல்லாம் மனப்பாடம். ஜோதிடம் தெரியும் இந்தப் பக்கத் திலேயே, ரொம்பக் கியாதி அவனுக்கு" என்று கிழவி கூறி விட்டு. ஏன் இந்தக் காலத்திலே, இதை எல்லாம் மறுக்கிறார்கள் என்று எண்ணி வருத்தப் பட்டுக் கொண் டாள். என்ன செய்வதுதென்று தெரியாமல் சிலைபோலனார் டாக்டர். "டாக்டரய்யா? என் வினை அது, அதுக்கு யார் என்ன செய்ய முடியும். வுட்டுத்தள்ளுங்க. நீங்கள் வீண் பொழுதை ஓட்டாமபடிக்கு. ஒ நகடுதாசி எழுதிக் கொடுங்க என்று கெஞ்சினாள். டாக்டரின் கண்களிலே நீர் கசிந்தது - கோபமும் கொப் பளித்துக் கொண்டு வந்தது. ஆனால் யார் மீது கோபித்துக் கொள்வது?