பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

________________

63 பீஜபூரிலே ஒரு சுல்தான் தன்னைத் தூது போகச் செய்த அப்சல்கான். துடிதுடிக்கும் படையுடன் இருக்கும் காட்சி எதிரே பிரதாப்கார நகரம் - அங்கேயோ, மராட்டிய குலம் ஆள்கிறது ஒரு புறம் இஸ்லாமியர் மற்றொர்புரம் மராட்டி யர் ஆசிரியர் ஆட்சி பீடத்திலே எங்கும் தென்படவில்லை. பெருமையுடன் அந்த பூபாகத்தை பாரத் வருஷம் பரத கண்டம் ஆரியவர்த்தம் என்று பேசிக் கொள்ளும் ஆரியர் அரசபீடத்திலே இல்லை தூதுபோகும் வேலைதான் கிடைத் தது கோபிநாத் பண்டிட்ஜின், மனக்கண் இவை போன்ற காட்சிகளைக் காணாதிருக்க முடியாது! அப்சல்கான் அனுப்பிவைத்த கோபிநாத் பண்டி-ஜி சில சகாக்களும் பணியாட்களும் புடைசூழ நகருக்குள் நுழைநதார். 'பணிந்துவிடு சிவாஜி ! இல்லையேல்/அழிவு இந்நகருக்குள் நுழையும் நீ அஞ்சா நெஞ்சனாக இருக்கலாம் ஆனால். அப்சலகானிடம் இருக்கும் படை பிரமாண்ட மானது" என்று கூற, சிவாஜி, கோபிநாத் பண்டிட்ஜீயை மரியாதையாக வரவேற்றான். உபசாரம் பல புரிந்தான். அவரும் உடன் வந்தோரும் தங்கியிருக்க, இடவசதிகள் ஏற்பாடு செய்து தந்தான். ஒரு பலம் பொருந்திய துரைத் தனத்தின் தூதுவராக வந்துள்ள பண்டிட்ஜியை மிக்க கெளரவமாக நடத்த வேண்டுவது முறைதானே முறை தெரியாதவரா வீர சிவாஜி முறைமட்டுமல்ல கொஞ்சம் யூகமும் தெரிந்தவர். கோபிநாத் பண்டிட்ஜி பிரம்ம குலத் தவர் என்பது தெரிந்ததும் சிவாஜிக்கு வர இருக்கும் ஆபத தின்றும் தப்ப ஒரு வழி கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கை பிறந்தது.கோபிநாதருக்குச் செய்தமகத்தான உபசாரத்தின் உட்பொருள் அதுதான். அவருடன் வந்தவர்களுக்குத் தரப்பட்ட விடுதிகளினின்றும் கொஞ்சம் தொலைவான இடத்திலே பண்டிட்ஜிக்கு தங்கும் இடம் அமைக்கப் பட்டது. நள்ளிரவில் சிவாஜி அந்தத தனியிடம் சென்றான்.