பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

________________

64 கோபிநாத் பண்டிட்ஜியிடம் தனியாகப் பேச தூது கூற வந்தவரை இலகுவில் தன்பக்கம் இழுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் மராட்டிய மாவீரரின்நம் பிக்கை வீண் போகவில்லை. மறையவர் மலர்ந்த முகத்து டனேயே வரவேற்றார் சிவாஜியை. "மாமுனியே, மராட்டிய மண்டலத்துக்கு வந்துள்ள ஆபத்தை நினைக்கும்போது.." மனக்கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மா வீரனே பணிவதன்றி வேறு மார்க்கம் இல்லை." "பணிவது பற்றியல்ல பூதேவா நான் சோகிப்பது என் மனோபீஸ்டம் சங்கலபம் பாழாகுமே." "படை பலம் அவனிடம் அதிகம் எதிர்த்துப் பயன் இல்லை. தோல்வி நிச்சயம் சம்பவிக்கும். அழிவை அணைத் துக்கொள்வாருண்டோ?" "மறையரே என் சங்கல்பம் இங்கு பாரத்வர்ஷத் திலே, நமது ஜென்மபூமியில், புண்யபூமியல். இந்து சாம் ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டும் என்பதுதான். என் பொருட்டு அல்ல பிராமணோத்தமர்களின் பொருட்டே. கான் இந்த பாடு படுகிறேன். என் இலட்சியம் தங்களுக்கு தெரிந்திருக்கும். பசு, பிராமணர் இவற்றின் இரட்சகன் சிவாஜி என்பதை ஸ்தாபிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். இந்த ராஜ்யம் ஏற்பட்டால்தான் பூர்வபெருமை நிலைக்கும் பண்டைச் சிறப்பு மீண்டும் தோன்றும் ஆரியவர் தத்திலே, வேதாச்சாரமும் குலதர்மமும் ஜொலிக்கும் ஸ்வாமி! சித்தம் குழம்பியிருக்கும் நான் தங்களை யாசிக் கிறேன். என் சங்கல்பம் ஈடேறவழி செய்யுங்கள். சனா தன தர்மம் தழைக்க உபாயம் கூறுங்கள். இந்த பீஜம்பூர் படையினால் அழித்துவிடலாமோ, நான் பாடுபட்டு வளர்த் துவரும பால்யன்! பூஜிதரே! ஒரு வழி காட்டும்"