பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6 மான காரியங்கள் செய்தால், செய்ய வேண்டுமென்று பேசினால், 'ஆகா அக்கிரமக்காரர்கள், ஆகாத காரியம் புரி கிறார்கள்' என்று எங்களைக் கண்டிப்பதற்கு இடமேற்படும் ஆனால் நாங்கள் அப்படி ஏதும் செய்யவில்லையே! நாங்கள் இங்கே திருமணம் செய்துகொள்ளும் மண மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணைவர் களாகிறோம். என்று இன்று எடுத்துக் கொள்ளும உறுதிக்குச் சாட்சிகளாகத்தான் வந்திருக்கிறோம். இங்கே கூடியுள்ள அத்தனை பேரும உற்றார் உறவினர் உட்படவும் அதற்காகத்தானே வந்துள்ளனர். மணம் செய்வதற்குச் சாட்சிகளாக இருக்கவும், மண மக்களை வாழ்த்தவும். புத்திமதிகளைக் கூறவுந்தான் நாம் அனைவரும் இங்கே கூடியுள்ளோம் இதைத்தான் நாம் செய்கிறோம். இதைக் கண்டு என சிலர் சந்தேகப்பட வேண்டும்? எதற்காக எதிர்ப்புக் காட்ட வேண்டும்? சில பெரியவர்கள், வைதீகத்தில் பெரிதும் ஊறியவர் கள் வேண்டுமானால் சில காரணங்களைக் கூறுவார்கள். அதாவது இந்தத் திருமணத்திலே அவர்கள் எண்ணட்படி யும் முறைப்படியும் காரியங்கள் நடைபெறவில்லை என்பது தான் அவர்களுக்கு ஏற்படும் குறைகள்! அவர்கள் எண்ணப்படி, முறைப்படி நாம் இங்கே அய்யரை அழைத்து அக்கினி வளர்க்கவில்லை. அகல் விளக்கு ஏற்றி வைக்கத் தவறிவிட்டோம் அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கத்தை விட்டுவிட்டோம். அர சாணிக்கால் நட்டு அதைச்சுற்றி வரவில்லை, மணமக்கள் அய்யர் மந்திரம் ஓதித் தாலி கட்டவில்லை.