உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

இப்படிப்பட்ட மணமுறைகளைப் பற்றிய தவறான கருத்துக்களும் பொருத்தமற்ற சந்தேகங்களும தோன்றாது அடியோடு மறைந்துவிடவில்லை. எதிர்ப்புகள் அன்றுபோல அதிக அளவில் இல்லாமலிருக்கிறதே தவிர எதிர்ப்பே இல்லையென்ற நிலை ஏற்பட்டுவிடவில்லையென்பதை நாம் உணரத்தான் வேண்டும்.

இன்று சீர்திருத்தத் திருமணங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன. என்றாலும் எதிர்ப்புகள் அங்கங்கே இருக்கத்தான் செய்கின்றன. இப்போது இங்கு நடைபெருகின்ற திருமணத்திற்குக்கூட ஏதோ எதிர்ப்புகள் இருந்ததாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.

இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களைக் கண்டு சிலர் பயப்படுவதற்குக் காரணமே கிடையாது, நாங்கள் என்ன நடக்கக்கூடாதது எதையும் செய்யவில்லையே! என் றைக்கும்போல ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குந்தானே இங்கே திருமணம் நடத்தி வைககிறோம். அதிலும் ஆணின் கண்ணைக் கட்டிக்கொண்டுவந்து மணப்பந்தலில் நிறுத்தி விட்டு அதன் பின்னர் அதோ இருக்கும் அந்தப் பெண் தான் உனக்கு மனைவியாகப் போகிறவள் என்று கூற வில்லையே!

ஆணும் சரி, பெண்ணும் சரி, முன்னதாகவே ஒருவரைப்பற்றி மற்றவர் நன்றாக அறிந்து தெரிந்து கொண்ட பின்னர்தானே திருமணம் நடைபெற வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம், செய்கிறோம்,

ஒரு ஆணுக்கும், மற்றொரு ஆணுக்கும், அல்லது ஒரு பெண்ணுக்கும் மற்றொரு பெண்ணுக்குமா திருமணம் நடத்துகிறோம்? இல்லையே! அப்படி ஏதாவது அக்கிர-