69
"ஒரு விதத்தில் என் வெற்றிதான்."
"ஒருவிதத்தில் மட்டுமா, சகல விதத்திலும் கோபிநாத்தின் வெற்றிதான் அது. போரிடப் புறப்பட்ட அப்சல் போரிடாமலேயே மாவீரனை மண்டியிடச்செய்து விட்ட மகிழ்ச்சிப் பெருக்கால், கேளிக்கையாகத்தானே இருந்திருப்பான். ஏன் இராது? எந்தப் பக்கமும் எந்த வீரனுடைய வெற்றி முரசு கேட்டு வந்ததோ, எந்த வீரனின் வெற்றிக் கொடி மலை உச்சிகளிலெல்லாம் மகோன்னதமாகப் பறக்க விடப்பட்டதோ, அந்த வீரன் மண்டியிடச் சம்மதிக்கிறான் என்றால், மகிழ்ச்சி பிறக்காதிருக்குமோ. அப்சல்கானுக்கு,
அந்த மகிழ்ச்சி பன்மடங்கு அதிகமாயிற்று, சிவாஜியால் அனுப்பப்பட்ட தூதன், அப்சலிடம் சரணாகதியை உறுதிப்படுத்த வந்தபோது. கோபிநாத் பண்டிட்ஜி அப்சல்கானால், அனுப்பப்பட்ட தூதன்! சிவாஜி அனுப்பிய தூதனும், ஓர் பிராமணனே! பெயர் கிருஷ்ணாஜி பாஸ்கர்.
'சிவாஜி, சமர் செய்ய விரும்பவில்லை. பீஜப்பூர் ஆட்சிக்கு அடங்கி நடக்க ஒப்புக்கொள்கிறார். பீஜப்பூர் சுல்தானின், அதிகாரத்துக்குக் கட்டுப்பட இசைகிறார் சரண் அடைய விரும்புகிறார். வீராதி வீரனே! எங்கள் சிவாஜியின் இந்த வேண்டுகோளைத் தயை கூர்ந்து ஏற்று அருள் வேண்டுகிறேன்'. என்று பாஸ்கரன் கூற அது கேட்டுப் பரமானந்தம் அடைந்த அப்சல்கான், நமது படையுடன், பிரதாப்கார் நகருக்குள் பவனி வருவோம், அங்கு சிவாஜி பணியட்டும், பீஜப்பூர் ஆட்சியின் கீழ் வாழச் சம்மதிக்கும் சிவாஜிக்கும் நாம், சுல்தானின் பிரதிநிதி என்ற முறையிலே, பேட்டி