பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

________________

74 தண்டனை பெற்று. (அந்தமான் தீவு போன்ற டெவில்ஸ்) தீவிலே உழல்கிறான் அவன் செய்த குற்றம் என்ன? அதைத்தான் அவன். தணடிக்கப்பட்ட அன்றும் கேட்டான் தீவிலே ஒவ்வொரு நாளும், கேட்டபடி இருந்தான்; பதில் என்ன? காற்று ஏதோ பேசிற்ற; புரியாத மொழி! அலை ஒலித்தது; ஒலிதான்,பொருள் இல்லை! அவனுடைய பெரு மூச்சு ஒன்று தான் புரியக்கூடிய மொழியாக இருந்தது. அநியாயமாகத் தண்டிக்கப்பட்டான். வஞ்சகரின் வலையில் சிக்கினான். வதைகிறான் அக்ரமக்காரரின் இலக்காகி இம் சைப்படுகிறான் குற்றமற்றவன். கொடுமை செய்கின்றனர் என்று தெரிவிக்கிறது பெருமூச்சு. அது, தீவில்! பாரிஸ் நெடுந்தூரத்தில் இருக்கிறது, பாரிஸ் தீவிலே, திக்கற்ற நிலையிலே. தீயர்களின் சூழ்ச்சி யினால் தண்டனை பெற்ற 'டிரைபஸ்' 'ஒரு குற்றமும் நான் செய்யவில்லையோ என்று குமுறிக்கொண்டிருந்தான். அலைகடலிடையே உள்ள அந்தத் தீவிலே அவன் ஆறு தல் கூறுவாரின்றி அவதிப்பட்டான். கண்ணெதிரே கடல கருத்திலேயும் கடல்தான். அலை அலையாக எண்ணங்கள். தாய்நாட்டைத் துரோகம் செய்து அரசாங்கத்தாரின் இராணுவ இரகசியத்தை வெளியிட்டான் என்று 1895-ல் குற்றம் சாட்டப்பட்டு, ஆயுட் தண்டனை தரப்பட்டவள் டிரைபஸ். அவன் மீது சுமத்தப்பட்டது அபாண்டம் என்று நிரூபிக்கமுடியவில்லை. உண்மைக் குற்றவாளிகள் டிரைபசைப் பலியிட்டுச் சட்டத்தைச் சரிப்படுத்தி விட்டுத் தங்களைக் காப்பாற்றிக்கொண்டனர் அவன் தீவிலே திகைக்கிறான்; தீயர்கள் தேசத் தலைவர்களெனத் திகழ் கின்றனர். டிரைபசுக்காக வாதிட யாரும் இல்லை! அவன் மனைவி ஓயாது அழுதாள். நன்பர்கள் கதறினர். ஆனால் அவன் பொருட்டுப் போரிட ஒரு மாவீரனும் தோன்ற வில்லை. அவனுக்காகப் போரிட வேண்டுமென்