பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

________________

ஏழை பங்காளர் "கொடுமை! கொடுமை! ஒரு பெருமூச்சு. அக்ரமம்! அநீதி! அடுக்காது.' கண்ணீர் புரள்கிறது. 'எனக்கா இந்தக்கதி? ஏக்கமான பார்வை,கடலைக் கடந்து சென்று பாரிஸ் பட்டணத்திலே மாளிகை, மனைவி,மக்கள் உற்றார் உற வினர் மீது பாய்கிறது. 'ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இந்தக் கடுந் தண் டனையா? நீதிக்காகப் போராடுபவர்கள் இல்லை யா? நிரபராதியைக் காப்பாற்ற யாரும் இல்லையா? பொய்யை மெய்யென்றாக்கும் வஞ்சகரை வீழ்த்த ஒரு வீரன் இல்லையா? உண்மைக்காகப் பரிந்து பேச, யாரும் இல்லையா? ஏழை பங்காளர் உண் டோ இல்லையோ! ஒரு பிழையும் செய்தறியாத என்னை இந்தத் தீவிலே தள்ளிய தீயர்களின் போக்கை, எதிர்க்கும் துணிவுகொண்ட ஒரு தீரன் இல்லையா எல்லோருமா மண்டியிட்டு விட்டனர் ஒருவர் இல்லையா உண்மை உரைக்க! என் பொருட்டுப் போரிட! நீதியை நிலைநாட்ட! சோர்வுமேலிட்டுச் சாய்கிறான்! அவனுடைய உடை சுக்குநூறாகிக் கிடக்கிறது. ஒரு காலத்தில் ராணுவர் உடை தரித்துக் கம்பீரமாகப் பாரிசில் உலவியவன் ஆயுள்