பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

________________

81 அந்தப் புத்தகம் பாரிஸ் நகரையே குலுக்கியது மூதியோர்கள் திகைத்தனர். இளைஞர்கள் துடி.துடித் தனர். அது நாட்டில் நிலவிய கொடுமையை விளக்கிக் காட்டியது. நாட்டின் நலிந்த நிலை ஏட்டிலே இடம்பெற விடுவது உயர்ந்த தன்மையல்லவென்று கலைப்பூங் காவின் காவலர்கள் சினந்தனர். ஆனால் கரடு முரடான வாழ்வினர். 'இவை இதற்குமுன் ஏன் எட்டில் வரவில்லை எனக்கேட்டனர். புத்தகக் கடைகளிலெல்லாம் புத்தகங்கள் கண்ணுக்குத் தெரியும்படி வைக்கப்பட்டிருந் தன. சமூகத்தில் 'மதிப்பிற்குரிய வகுப்பினர் திடீரென்று புத்தகக் கடையில் நுழைந்து பலப்பல புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்ப்பார்கள்' கடைசியில் ஏதோ பேச்சு வார்த்தையில் கேட்பது போல 'நானா' இருந்தால் ஒரு புத்தகம் தா எனச் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு மெதுவான குரலில் கேட்டு வாங்கிச் சென்றனர். "நானாவைப்பற்றி பாரீஸ் முழுவதும் பேசிக்கொண் டிருந்ததேயன்றி உண்மையான 'நானா'வுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவள் வழக்கம்போல் 'வாழ்வை" நடத்திவந்தாள். ஒருநாள் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. நானா சென்று கதவைத் திறந்தாள். ஒருவரையும் காணோம். கதவுப் பிடியில் மூட்டை யொன்று தொங்கியது. அதை அவிழ்த்ததில் 'நானா' என்ற புத்தகம் பூங்கொத்து. தின்பண்டங்கள், முதலியன இருந்தன. பணம்.. அப்படிப்பட்ட ஜோலா, பிரான்சு நாட்டிலே இலக்கிய மன்றத்தாரரல் ஏளனம் செய்யப்பட்டு, புத்தகம் வெளியிடுவோரால் புறக்கணிக்கப்பட்டு, மேட் ருக் குடியினரால் வெறுக்கப்பட்டு, தன் பாட்டு மொழி அ-6