பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

________________

80 வில்லை.அவர்கள் தான் அந்தக் கடையில் கடைசி. சொந்தக் காரன் கடைசியாக ஒவ்வொரு விளக்காக அணைக்க ஆரம் பித்தான். அப்பொழுதுதான் எழுந்துபோக மென்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகியது. வேண்டு மூவரும் வெளிக் கிளம்பினர். ஜோலா அவளுடைய அறைக்குப் போகவேண்டுமென்று பிடிவாதம் செய்தான். நகரில் மிக மோசமான துர்நாற்றம் வீசுகிற குறுகிய தெருவை அடைந்தனர். புழுதியடைந்த வீட்டு வாயிற் படிகளில் பெண்கள் "ஏதாவது அதிர்ஷ் - ம் வராதா?" என்ற நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தனர் ஜோலா போகும்பொழுது அவர்களது ஆச்சரியக் குரலும், ஏளனச் சிரிப்பும், பொறாமைப் பேச்சும் அவனுடன் வரும் மங்கை யின் மீது வீசப்படுவதைக் கேட்டான். தன்னுடைய வருகை தூய்மையானது என்பதைக் காட்டத் தன் நண்பனைத் தொடரும்படி கையசைத்து விட்டு, ஜோலா அப்பெண்ணின் அறைக்குள நுழைந் தான். மங்கிய விளக்கொளியில் அலங்கோலமான அந்த அறையில் அவன் கடிதக் கட்டுகளையும், புகைப் படங் களையும் புரட்டினான். கடைசியாகப் புகைப்படமொன்று கிடைத்தது. 'நானா" ஆம் அவளுடைய பெயர் குழக் தையின் சட்டையொன்றை அவன் கையிலெடுத்தான். அம்மங்கை கண்ணீர் விட்டுக் கதற ஆரம்பித்தாள் அவளுடைய குழந்தை. அது இறந்துவிட்டது. ஜோலாவுக்கு உலக வரலாறே கண்முன் வந்து நிற்பது போலக் காணப்பட்டது. ஆவேசத்துடன் தன நண்பனை அழைத்து அவன் கையிலிருந்து அப்பெண் ணின் சித்திரத்தில் "ரிரனா" என்ற பெயரைத் தீட்டினான் அந்தப்பெயரில் ஒரு பெருங்கதை பிறந்தது, உலகையே உலுக்க.