பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அன்பு வெள்ளம்


எல்லையற்ற தம் அன்பினுக்கு மாந்த இனம் வேட்கை கொண்டு மெய்யான அன்பு நெறிக்குத் திரும்புவர் என்று எல்லாம்வல்லார் நம்புகிறார். தீயவனாயினும் அவனை மீண்டும் புதிதாகப் படைக்கப் பட்டவனாகக் காண்கிறவர், அவரில் நம்பிக்கைக் கொண்டவரைப் பற்றினரை ஒரு வெற்றியாளனாகக் காண்கிறார். அவன் அன்பு நெறியில் நடந்திடக் காண்கிறார்.

யார் எவரைக் கண்டாலும் வெறும் பொறிபுலன்களைக் கொண்டு பார்க்காமல், கடவுள் எல்லா மனிதரையும் பார்ப்பது போல நெஞ்சக் கண்கொண்டு பார்த்திடல் வேண்டும்.

கடவுளின் அன்புப் பார்வைபட்டு ஏழைகள் செல்வர் ஆகின்றனர். கந்தல் உடுத்தியவர் கவின்மிகு ஆடை உடுத்து கின்றனர்; தன்னலம் மிக்கவர் அன்பு மிக்கவர் ஆகின்றனர்.

நாமும் அப்படி மற்றவரை உயர்த்த வேண்டும் என்றால் நம்மில் இருக்கும் இறைப்பற்று பல்கிப் பெருகி அவ் இறையின் பற்றினைப் பற்றிடல் வேண்டும். அதன் பிறகே நாமும் இல்லார்க்கு உதவிடலாம்.

புலன் உணர்வு கொண்டு காணும் வெற்றுக் கண்ணுடன் பார்த்தோமானால் அந்தக் கண்ணோக்கால் இயேசு பார்த்த அன்புப் பார்வையை நாம் பெறுவது முடியாது. இயேசு அருளார்வம் கொண்டு ஆற்றிய அன்புப் பணியும் நம்மால் ஆற்றிட இயலவே இயலாது.

இயேசுவில் புதிதாகப் படைக்கப்பட்டவர் அன்பு உணர்வுள்ளவராக இருத்தல் வேண்டும். கடந்து சென்ற ஆண்டுகளில் தன்னலம் என்னும் திகைப்பூட்டும் சிக்கல் நிலையில் போராடிக் கொண்டிருந்த நம்மை நல்வழிப்படுத்த இருப்பது அன்பு. நம் வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்திக்கவும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறவும் செய்திட வல்லது அன்புதான்.

இதுவரை நாம் விழிப்பற்ற நிலையில்தான் இருந்து வந்தோம். நமக்குள்ள தன்னையறியும் நெஞ்சம் வலுவற்றது, நோயுற்றது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் பற்றார்வம் - நம்பிக்கை பற்றுறுதி என்பது இடம் பெறும் என்று எண்ணவே இடம் இல்லை. எப்பொழுது நாம் நம்மைத் தெய்விகப் பேரன்புக்கு ஒப்படைக்கிறமோ அப்பொழுதுதான் தன்னல வலையில் நம்மைப் பிணைக்கக் கூடிய கயிற்றினை அறுத்தெறிய முடியும். நாம் யார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/48&oldid=1219638" இலிருந்து மீள்விக்கப்பட்டது