பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

51


முடியாத சிக்கல்கள் அறவே இல! அவரால் எதிர்த்து முடியாத இடையூறுகள், குணப்படுத்த முடியாத நோய்களும் இல. அவர்தம் இரக்கம் நம் உணர்வில் ஓங்குகிறது. அவர் தம் அன்பு நம்முடைய அன்பாக இயங்கி வருகிறது.

அருளாளர் இயேசு நம்மில் இருக்கிறார். அவர்தம் ஆற்றல் நம்முடன் இருக்கிறது.அவர்தம் இரக்கம் நம் உணர்வில் தங்கி வருகிறது. அவர்தம்மில் நாம் ஒருவராக விளங்கி வருகிறோம்.


அன்பில் ஒடுங்கி மறைகிறது தன்னலம்

டவுளின் கையிலிருக்கும் உருக வைக்கும் மட்கலம் போன்றது அன்பு. அந்த மூசைக் கலத்தில்தான் நம் அனைவரையும் ஒருங்கே போட்டு உருக வைக்கிறார்; அவரோடு நம்மை ஒருங்கிணைய வைக்கிறார். அந்த இணைப்புத்தான் அன்பு. அவ் அன்பு ஒன்றுதான் நம்மை எதிர்நோக்கியிருக்கும் எல்லாச் சிக்கல்களுக்கும் காணப்படும் தீர்வு.

'இரு வகை அன்பு' என்பது பற்றி ஒரு முழுமையான பயிற்சிக்கென்று ஒரு துறையிலிருந்து அது, இரு வகை அன்பினைப் பற்றிய பயிற்சியும் தந்திட முன்வருவோமேயானால், ஒவ்வொரு பல்கலைக் கழகத்தினையும் புரட்சிகரமானதாக்கிவிடும்.

உலகினில், அஃது உயிர்ப்பார்ந்த - மிக இன்றியமையாத ஒன்றாகும். இதுவரை அன்பினைப் பற்றி நாம் அறிந்துள்ளது சிறிது அளவேயாம்.

இயற்கையில் மாந்தரிடையே உள்ள அன்பு எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறது என்றால், மன முறிவு - நீதி மன்றங்களுக்குச் சென்றிடும் தேவதையாக வழக்கறிஞர்களின் சொல்லாடல்களில் அல்லற்பட்டு அலைக் கழிக்கப்படும் மானிடப் பந்துகளாகும் நிலைக்கு என்றால் மிகையல்ல. மானிட அன்பின் பேரால் வந்துறும் அழிபாடுகளிலிருந்து, அழிவு மீட்புச் செய்யப் போவது யார்? எப்போது? அந்த நற்காலம் விடிவது எந்நாள்?

ஆன்றவிந்தடங்கிய சான்றோர் அன்பினைப் போன்ற அன்பு நம் நாட்டில் உச்ச உயர்நிலை மேலாண்மையை எய்துமேயானால், நாட்டில் உள்ள வழக்கறிஞர்களில் பெரும்பாலோரை வழக்கறிஞர் தொழிலை விட்டு ஓடோடச் செய்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/55&oldid=1515471" இலிருந்து மீள்விக்கப்பட்டது