பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

53


உள்ளபடியே அன்புடையவராக இருந்தால், ஒரே ஒருநாள் பழகினும் அவர்கள் உள்ளம், உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்துவிடும். அவர்களின் நெஞ்சத்தின் ஆழத்தில் உள்ள அத்தனையும் நமக்குத் தெரியக் காட்டிவிடும்.

"அன்புடைய ஒவ்வொருவரும் கடவுளால் பிறப்பிக்கப் பெற்றவர்" நம்மில் இயேசுவின் அன்பின் உண்மைத் தன்மையை நாம் அறிந்தோமா இல்லையா என்பதை ஆயத்தான் அவ்வாறு தேவனால் பிறப்பிக்கப் பெறுகிறோம்.

தேவனால் நாம் பிறப்பிக்கப் பெறாத யாரும் அன்பு செலுத்தாதவர்; அன்புள்ளவர் போல் பாசாங்கு செய்பவர் - போலியாக நடிப்பவர் - நடப்பவர்; அன்பினைப் பெற்றிட முயல்பவரைப் போன்று நடிக்கலாம் - நடக்கலாம் ஆனால் அதன் பின்விளைவு என்ன? வாழ்க்கையில் ஏமாற்றமும் தோல்வியும் தான் காணப்படும். வாழ்வில் வெற்றி ஒருபோதும் கிட்டாது.

அன்பு உண்மை, மெய்ம்மை வாய்மை!

கிறித்துவின் ஆவி, அன்பின் ஆவி! இயேசு அனை வருக்கும் அன்பர் அனைவருக்கும் அன்பினர். "ஆயக்காரனிலும் இவன் பெரியவன் என்றும் மத்தேயுவிலும் பெரியவன் என்றும் சொல்லப்பட்ட 'சகேயு’ (Zacchaeus) என்பவனை அன்புடன் விரும்பினார்; யூதா, யூதாசு, யூதாசு காரியோத்து என்றெல்லாம் அழைக்கப்பெற்ற (Judas) யூதாவை அன்புடன் விரும்பினார். பொந்தியு பிலாத்து (Pontius Pilate) என்பவனையும் அன்புடன் விரும்பினார்.

இயேசு நோயாளிகளைக் குணமடையச் செய்தது தம்மைக் கடவுள் என்று மெய்பிக்க அன்று. நோயுற்றவர்களையும் விரும்பினார். மன்பதை மாந்தர்படும் துன்பம் அவருக்கு ஓர் அறைகூவலாக இருந்தது. ஆகவே மன்பதையின் - மாந்த இனத்தின் துன்பங்களைப் போக்கினார்.

குறுக்கையில் இயேசு கிறித்து தம்மை ஒப்புக் கொடுத்து மரித்தது எதற்காக? நம்மை விரும்பியததால் - நம்மில் அன்பு கூர்ந்ததால். நம்மை அன்புடன் நேசித்தார்; நமக்காகவே அவர் தம்மை ஒப்புக் கொடுத்தார்.

உரோமர் 12 : 9 'உங்கள் அன்பு மாயமற்றதாக இருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக் கொண்டிருங்கள்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/57&oldid=1515472" இலிருந்து மீள்விக்கப்பட்டது