பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அன்பு வெள்ளம்


ஏற்படத்தக்க ஆதாரங்களான, தீவினைகள், நோய்கள், இக்கட்டான சூழ்நிலைகள், இயற்கை விதிமுறை ஆகியவற்றை வென்று அடக்கும் எல்லா அதிகாரமும் வல்லமையும் அன்புறவில் இணைந்து பிணைவதால் நாம் வென்றிட முடியும்.

எந்தச் சிறப்பும் இல்லாத ஒருவரைக் கூட தெய்வ நிலைக்கு உயர்த்திவிடும் ஆற்றல் வாய்ந்தது அன்பு! அன்பின் வெளிப் பாட்டினை நமக்கெல்லாம் அருளிச் செய்தது, கடைசி நாள்களில் சிக்கல்கள் பல வந்துறினும், அவற்றை எதிர்த்து நின்று வெற்றி கொண்டு வீரர்களாகத் திகழ வேண்டும் என்பதற்காகத் தான்!

"வெளிப்படுத்தின சிறப்பு" எப்படி இறுதியில் அன்பு வெற்றி பெற்றது என்பதையும், மானிடராகிய வீரர்களையும், கயவர்களையும் கீழ் அடக்கி வெற்றி பெற்றது ஆட்டுக்குட்டி என்று நமக்கு விளங்க விரிக்கிறது. ஆட்டிக்குட்டிதான் அன்பு! வெளிப்படுத்தல் சிறப்புப் புத்தகத்தில், 20 இடத்திற்கும் மேலாக இயேசு பெருமான், 'ஆட்டுக்குட்டி' என்றே குறிப்பிடுகிறார் - அழைக்கப்பெறுகிறார். சொல்லின் மூல முதற்பொருள்படி சொல்ல வேண்டுமானால், குழந்தை ஆட்டுக்குட்டி, பச்சிளம் ஆட்டுக்குட்டி, திக்கற்ற ஆட்டுக்குட்டி என்று சொல்லி அழைக்கப் பெறுகிறார் இயேசு பெருமான். அன்பு எப்படி ஆதரவற்றதாக இருக்கிறது என்று பார்க்கிறோம். இருந்தும் அன்பே வெற்றி பெறுகிறது. கடவுள் இருப்பதனால், கடைசியில் அன்பே அனைத்தையும் வென்று மேம்பட்டு நிற்கிறது.

முழு நிறைவான அன்பு

'சான்றவர் சான்றாண்மை நம்மில் அன்பு கூர்ந்தது போன்று, நாமும் ஒருவரில் மற்றொருவா அன்பு கூர்ந்தால், நாம் ஒருபோதும் யாரையும் புண்படச் செய்ய மாட்டோம்; மற்றவரைப் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே பழக மாட்டோம். எதைச் செய்யக் கூடாதோ, பேசவும் கூடாதோ அதுபற்றி எதுவும் பேச மாட்டோம்.

கடவுள், பழைய சட்டதிட்ட முறையில் ஒருவரை ஒருவர் அன்புடன் விரும்பச் சொல்லி ஆணையிட்டது. ஆனால் அந்தக் காலத்து மக்களால் ஒருவரை மற்றொருவர் அன்புகாட்டி விரும்பும் திறனில்லாதவராயினர்.

ஆனால் இன்றோ நமக்கு அன்பினையும் அதன் இயல் பினையும் சேர்த்தே நமக்குக் தந்தருளியுள்ளனர் நயனோடு நன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/68&oldid=1515477" இலிருந்து மீள்விக்கப்பட்டது