பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

பாம்புகள் பொருந்திய விடர்களிலிருந்து வரும் குளிர்ந்த நீர் ஒடுக்கமான துறைகளின் வழியாகத் தேனுடன் கலந்து வருவதால் ஆறுகள் யாவும் நிறைந்தன வெண்மையான கொம்பையுடைய யானை பாய்ந்து குத்திய புண் மிக்கதால் பசுமையான கண்ணையுடைய ஆண் புலி குகைக்குள் ஒடுங்கி இருக்க, செம்முருக்கின் அரும்பைப் போன்ற கூரிய நகத்தையுடைய பெண் புலி அதனைக் காவல் மேற்கொண்டிருக்கும் ஆதலால் அந்த வழியில் எவரும் செல்லார்.

அந்த நிலையில் இருள் வந்து விட்டது என்று எண்ணாதவனாய் வெற்றி தரும் வேலைக் கையில் கொண்டு நம்மிடம் காதல் கொண்டு வந்த நன்மையாளனான தலைவன் தன் எண்ணம் பயனில்லாதாக நம்மைக் கூடாது மீண்டால் இன்றைய இவ் இரவும் உயிருடன் இறேன். நம் முலையிடத்ததான சுணங்கு அணிந்த பரப்பில் கிடக்கும் முத்து மாலையைப் போன்றும் மலையின் நீண்ட சோலையில் துளிகள் சிதறும் குளிர்ந்த வெள்ளருவியைப் போன்றும் திங்களின் அழகிய கதிர்கள் மலையில் பரவின.

452. அலராகின்றது உள்ளிவிழிவு போல்

தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர்
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
கழியாமையே வழிவழிப் பெருகி
அம் பணை விளைந்த தேக் கட் தேறல்
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்