பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

111

பக்கத்தே வர, வினவிச் சென்ற வலிய வில்லையுடைய காளை யாய தலைவனது, சாந்து பொருந்திய மார்பையும் அழகையும் மிகவும் விரும்பி, இங்கு நாம் வருந்துகிறோம் இத் தகைய வருந்தும் துன்பத்தை உணராமல், நம் தாய் தன் மனத்தில் தவறாக உணர்ந்து வெறியாடல் வேண்டும் என எண்ணி அழைத்து வரப்பட்ட முதுமையுடன் வேலன் ‘எம் கடவுளான முருகப் பெருமான் வருத்துவதால் இந் நோய் ஏற்பட்டது. என்று கூறி இதனைப் போக்கும் மருந்தை நான் அறியேன் என்று வேலன் கூறுவானாயின், நாம் அவனைப் பார்த்து ‘உம் கடவுளான முருகப்பெருமான் கொதிக்கும் சினமும் மத மயக்கமும் கொண்ட களிற்றின் உடலுக்குள் செல்லச் செந்நிறம் பூசினாற் போன்ற ஊன் பொருந்திய அன்புடன் காட்டின் விலங்குகள் போன அடிச்சுவட்டைத் தொடர்ந்து வேட்டையாடச் செல்வதும் உண்டோ! என்று நாம் வினவினால் என்ன? என்று தலைவன் விரைந்து மணந்து கொள்ள வேண்டும் என்ற உட்கோளுடன் தோழி உரைத்தாள்.

457. மீட்டுத் தருவேன் உன் நலத்தை

தாழ் பெருந்தடக் கை தலைஇய, கானத்து
வீழ் பிடி கொடுத்த, வெண் கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ
பின்னிலை முனியானாகி, நன்றும்
தாது செய் பாவை அன்ன தையல்
மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின்
தீது இன்றாக, நீ புணை புகுக என
என்னும் தண்டும்.ஆயின், மற்று அவன்
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே -
ஒல் இனி, வாழி, தோழி - கல்லெனக்
கண மழை பொழிந்த கான் படி இரவில்
தினை மேய் யானை இனன் இரிந்துஒட
கல் உயர் கழுதில் சேணோண்ன எறிந்த
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லெ

அ ஐ-22