பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

113

அவன் பின்பு சிறிது நீங்குவானாயின், அங்ஙனம் நாம் வருந்தும்படி அவன் மீண்டு செல்லுதல் மிகவும் துன்பமானதாகும்.

நாம் அவனுக்கு அருள் செய்யாது போயினும் அவன் நம்மைப் பிரிந்து செல்பவனாக இல்லை தான் மேற்கொண்டு வந்த வினைகெடுதலால் மீண்டு சென்ற வேலையுடைய பகை மன்னன் மீண்டும் போர்க் களத்தில் படைகளுடன் கூடி மதிற்புறத்தில் வந்து தங்கினான். தங்க, நிலை பெற்ற மதிலையுடைய அரண் அந்தப் பகை வேந்தனை எதிர்த்து நிற்றல் முடியாதுபோனது அதனால் காட்டில் வாழ்ந்திருந்த கைக் கொண்ட வேலின் வலியமைந்த தன் தோற்றமானது பிழை யாதபடி தன் பழைய புகழை நிலைபெறச் செய்தவன் நன்னன் அவனைப் போன்று தலைவனை உன்னுடன் சேர்த்து நின் நலத்தை மீண்டும் உன்னுடன் கூட்டி வைப்பேன்” என்று தோழி இயம்பினாள்.

458. இங்கு இன்று தங்கிச் செல்க

‘இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
பசலை மேனி நோக்கி, துதல் பசந்து
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று
அலமரல் மழைகூ கண் தெண் பனி மல்க
நன்று புறமாறி அகறல், யாழ நின்
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?
கரை பொரு நீத்தம்! உரை எனக் கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி
நயன் அறத் துறத்தல் வல்லியோரே
நொதுமலாளர்; அது கண்ணோடாது
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ